கோவையில் கடனை வசூலிக்க சென்ற வீட்டில் அழகிகள்.. திருநெல்வேலிக்காரருக்கு மறக்க முடியாத அல்வா

post-img

கோவை : திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பைனான்ஸ் தொழில் செய்யும் லட்சுமணன், கொடுத்த கடனை வசூலிப்பதற்காக கோவைக்கு வந்துள்ளார். கோவை பீளமேட்டில் உள்ள வீட்டிற்கு கடன் வாங்கியவர் அழைத்ததன் பேரில் சென்றுள்ளார் லட்சுமணன். ஆனால் அவருக்கு அங்கு நினைத்து பார்க்காத ஒரு விஷயம் காத்திருந்தது. கடனுக்கு பதில் அழகிகளை தந்துள்ளார் அந்த நபர்.. அப்போது நடந்தது பற்றி பார்ப்போம்.
இன்றைய சூழலில் கடன் வாங்கியவர்களும், கடன் கொடுத்தவர்களும் சம அளவில் சிக்கலை சந்திக்கிறார்கள். கடன் கொடுத்தவர்கள் எப்படியாவது கடனை வசூலிக்க வேண்டும் என்று எந்த எல்லைக்கும் செல்கிறார்கள்.கடன் வாங்கியவர்களிடம் சொத்துக்களை அடமானம் வாங்கித்தான் கடன் தருகிறார்கள். இல்லாவிட்டால் கார், பைக், டிவி, ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் என ஏதாவது ஒரு பொருட்களை வாங்க இஎம்ஐ கடன் தருகிறார்கள்.

இந்த கடனை வசூலிக்க வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் கறார் வழிகளையே தேர்வு செய்கின்றன. அதேநேரம் தனிநபர்களும் சொத்தின் அடிப்படையில் கடன் தருகிறார்கள். அவர்களுமே கறார் அடிப்படையில் தான் செயல்படுகிறார்கள். அதேநேரம் சாமானிய மக்கள் பலர் கடனை, தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு நம்பிக்கையின் அடிப்படையில் கொடுத்துவிட்டு அதனை திரும்ப வசூலிக்க முடியாமல் ஏமாந்து போவதும் நடக்கிறது.
கோவையில் கடன் வாங்கிய ஒருவர் கடனை திரும்ப செலுத்தவதற்கு பதிலாக அழகிகளை காட்டி ஆசை மூட்டிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தேவப்பிரியன் என்பவருடைய மகன் லட்சுமணன் (வயது 35). இவர் நெல்லை பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் கோவை பீளமேடு அருகே தண்ணீர் பந்தல் ரோட்டை சேர்ந்த சூர்யா என்பவருக்கு தொழில் நிமித்தமாக கடன் கொடுத்திருக்கிறார்.
பணத்தை லட்சுமணன் திருப்பி கேட்டுள்ளார். கோவைக்கு வந்து நேரில் பெற்று கொள்ளுங்கள் என்று பீளேட்டில் உள்ள சூர்யா கூறினார். எனவே லட்சுமணன் பாளையங்கோட்டையில் இருந்து கோவைக்கு வந்து, ஹோப் காலேஜ் பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டு சூர்யாவை செல்போனில் அழைத்திருக்கிறார்.

உடனே சூர்யா அந்த பகுதிக்கு வந்து அவரை அழைத்துக் கொண்டு அருகாமையில் இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இரண்டு அழகிகள் இருந்தனர். அந்த அழகிகளை காட்டி லட்சுமணனுக்கு ஆசையை தூண்டினாராம் சூர்யா. அழகிகளும் உல்லாசத்துக்கு அழைத்துள்ளார்களாம். அழகிகளை பார்த்து சூர்யா ஒரு நிமிடம் மனம் தவறிய நிலையில், சுதாரித்துக் கொண்டு உடனே எழுந்தார்.
சபலத்தில் விழுந்துவிடக்கூடாது என்று மனதை மாற்றிக்கொண்ட அவர், உல்லாசத்துக்கு உடன்படாமல் அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர் அவர் இது குறித்து கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். உடனே பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதனை அறிந்த சூர்யா மற்றும் அவரது பங்குதாரர் ஜெபின் ஆகியோர் தலைமறைவாகி விட்டார்கள் .இதைத் தொடர்ந்து போலீசார் அங்கிருந்த 2 அழகிகளை மீட்டனர். தப்பி ஓடிய சூர்யா மற்றும் ஜெபின் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

Related Post