தமிழ் சினிமாவின் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் பப்லூ பிரித்திவிராஜ் சமீபத்தில் மலேசியாவை சேர்ந்த ருக்மணி ஷீத்தல் என்பவரை காதலித்து அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால்.. அவர் காதலித்த அந்த பெண்ணுக்கு வெறும் 23 வயது தான். இது பல்வேறு விவாதங்களை கிளப்பியது. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக தகவல் வெளியாகின.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் தங்களுடைய பக்கங்களில் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீக்கினார்கள். 56 வயதான பப்லு 23 வயதான பெண்ணின் மீது ஆசைப்பட்டு அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து அவரை பிரிந்தது மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது.
இதை தொடர்ந்து ருக்மணி ஷீத்தல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஆணின் கைகளை பிடித்துக் கொண்டு இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவில் கடவுள் நம் பிரார்த்தனைகளுக்கு எப்போதுமே பதில் கொடுப்பார். கடவுள் நமக்கு சிறந்ததை மட்டுமே தருகிறார். நாம் அவருடைய குழந்தைகளாக இருப்பதால்.. நம்மை அவர் பாதுகாப்பார்.. நான் எப்பொழுதும் கடவுளை நம்பியே இருக்கிறேன்.
ஆனால், இப்போது நான் அவருடைய மந்திரத்தை உண்மையாக உணர்கிறேன். கடவுளின் ஆசீர்வாதம் எங்கள் வாழ்நாள் முழுதும் எங்கள் இருவர் மீதும் பொழியட்டும். இந்த நாளிலிருந்து நல்லதோ கெட்டதோ மரணம் வரை பிரியாமல் ஒன்று சேர்ந்து அன்புடன் வாழ விரும்புகிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார்.
இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். என் அன்பானவனே.. என் நண்பனே.. என்னுடைய மிகப்பெரிய ஆதரவை பெற்றதற்கு நான் நன்றியுள்ளவராக இருக்கிறேன். ஜெய் ஸ்ரீ ராம் என பதிவிட்டு ருக்மணி ஷீத்தல்.
இதன் மூலம், தன்னுடைய திருமணத்தை உறுதி செய்திருக்கிறார். ஷீத்தலின் கணவர் ஒரு தடகள வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக இருந்தவர் தான்.
குறிப்பாக இங்கே அதிர்ச்சி அடைய வேண்டிய விஷயம் என்னவென்றால். இந்த பயிற்சியாளர் பப்லு உடற்பயிற்சி செய்யும் உடற்பயிற்சி கூடத்திலும் சில நாட்கள் பயிற்சியாளராக இருந்திருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்களின் உடலமைப்பு ரவிவாஸ் கிளாசிக்கல் வெற்றி பெற்று இருக்கிறார் இவர் என்பது கூடுதல் தகவல்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.