தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னனியில் இருக்கும் சில தொடர்கள் மக்கள் மனதில் ஆழமாய் பதிந்து விடும். சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி , கோலங்கள் , சித்தி, இப்படி பல தொடர்கள் இன்றும் மக்களால் பேசப்பட்டு வருகிறது.
Courtesy: Instagram
சன் டிவி சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு எப்போதுமே கிடைத்து வருகிறது. அந்த வகையில் டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் முக்கியமான சீரியல் தான் எதிர்நீச்சல். இதில் முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள்.
Courtesy: Instagram
இந்த சீரியலில் ஹயிலைட்டான ஒரேய நபர் குணசேகரன் தான். இவர் சொல்லக்கூடிய 'இந்தம்மா ஏய் ' பட்டி தொட்டி வரை பேமஸ் ஆகியுள்ளது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இவர் கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம்.
Courtesy: Instagram
இந்த சீரியலில் நன்றாக படித்திருக்கும் பெண்களை திருமணம் செய்து கொண்டு வீட்டில் மிகவும் அடிமையாக நடத்தி வருகிறார்கள். இப்படிப்பட்ட கணவர்களை மீறி சுதந்திரமாக தனக்கு பிடித்தவற்றை செய்து தைரியமாக வாழ வேண்டும் என்பதனை அனைத்து பெண்களுக்கும் உணர்த்தும் வகையில் இந்த சீரியலின் கதை அமைந்திருக்கிறது.
Courtesy: Instagram
அந்த வகையில் தற்பொழுது ஆதிரையின் திருமணம் அருணுடன் நடைபெறுமா? ஜனார்த்தனன் யார்? அப்பத்தாவின் சொத்தை எப்படி மீட்டெடுக்கப் போகிறார்கள் என்பதை வைத்து விறு விறுப்பாக கதை முன்னேறி வருகிறது.
Courtesy: Instagram
இந்த தொடரில் ஆதிரையாக சத்ய தேவராஜன் நடித்து வருகிறார். இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். மாடலிங் மூலம் லோக்கல் சேனல் ஒன்றில் பணிபுரிந்தார். பின்னர் சன் டிவியில் ம்யூசிக் சேனலில் விஜே வாய்ப்பு கிடைத்தது, அதன் மூலம் அவருக்கு தனி ரசிகர்கள் உருவானார்கள்.
Courtesy: Instagram
இவர் விஜய் டிவியில் அருவி தொடரில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் எதிர் நீச்சல் தொடரில் இவருக்கு திருமணம் நடக்க இருக்கும் நிலையில் அவர் டேபிள் டென்னிஸ் விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் குணசேகரன் பாணியில் , இந்தம்மா ஏய் , கல்யாணத்த வச்சிட்டு விளையாடுற என கமெண்ட் செய்து வருகிறார்கள்.