தகாத உறவு.. சொத்த அழித்த கணவர்.. ஸ்ரீவித்யா குறித்த ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்..!

post-img


நடிகை ஸ்ரீவித்யா தமிழில் பல படங்களில் நடித்திருந்தார். நடிக்க வந்த புதிதில் 1980களில் ரஜினி, கமலுக்கு ஜோடியாக நடித்தவர்.
ஒரு கட்டத்தில் இளம் ஹீரோக்களுக்கு அக்கா, அம்மா கேரக்டரில் நடித்தார்.

 


காதலுக்கு மரியாதை படத்தில் விஜய் அம்மாவாக கிளைமேக்ஸில் ஷாலினியை பெண் கேட்கும் காட்சியில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ஸ்ரீவித்யா.


அதே போல் ஆனந்தம், காதலா காதலா, நினைவே ஒரு சங்கீதம், மாப்பிள்ளை போன்ற பல படங்களில் நடித்த ஸ்ரீவித்யா, குணச்சித்திர நடிகையாக தன் நடிப்புத்திறனை காட்டியிருந்தார்.
நடிகை ஸ்ரீவித்யா

 

இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, பல படங்களில் நடிகை ஸ்ரீவித்யா குணச்சித்திர நடிகையாக நடித்து நிறைய பணம் சம்பாதித்தார்.
அதே போல் அவரது அம்மாவும் பிரபல பாடகி என்பதால் நிறைய சம்பாதித்தார். அதனால் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்த ஒரே மகள் ஸ்ரீவித்யா.
தகாத உறவு..
ஆனால் சில தகாத உறவுகளால் ஸ்ரீவித்யாவின் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. எதிர்பார்த்த இல்லற வாழ்க்கை கிடைக்காமல் பலத்த ஏமாற்றமடைந்தார்.


சொத்தை அழித்த கணவர்..
ஸ்ரீவித்யாவுக்கு கணவராக வாய்த்தவர் சரியில்லை. ஸ்ரீவித்யாவின் சொத்துகளை, பணத்தை எல்லாம் அழித்தார் அவரது கணவர்.
இதனால் கடைசி காலத்தில், உடல் நலம் கெட்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கேரளாவில் நடிகர் ஒருவரது உதவியால் புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஸ்ரீ வித்யா.
தகாத உறவால், சொத்துகளை அழித்த கணவரால் கடைசி நேரத்தில் கையில் பைசா இல்லாமல் இந்த மண்ணை விட்டு மறைந்தார் நடிகை ஸ்ரீவித்யா.
இவ்வாறு அந்த நேர்காணலில் ஸ்ரீவித்யா குறித்த ரகசியத்தை உடைத்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

 

 

Related Post