இயக்குநர் பாரதி ராஜா இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான கடலோர கவிதைகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரேகா. தனது முதல் படத்திலேயே இளைஞர்களின் மனதில் இடம் பிடித்த ரேகா தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்தது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் புன்னகை மன்னன், நடிகர் ராமராஜூனுக்கு ஜோடியாக நம்ப ஊரு நல்ல ஊரு, உள்ளிட்ட பல தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். தமிழில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை அமைத்துக்கொண்ட ரேகா பிற மொழி படங்களிலும் அறிமுகமானார்.
மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் அனைத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். உட்சபட்ச நடிகையாக இருந்த நடிகை ரேகா, திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகினார்.
குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்த ரேகா நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதேபோல் விஜய் டிவி, சன் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக அறிமுகமாகி இந்த நிலக்கட்சியின் மூலம் மேலும் பிரபலமானார்.
இப்படியாக தற்போது சீரியல், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி மிகழ்ச்சிகள் என செம பிஸியாக இருக்கும் ரேகாவின் குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளியாகியுள்ளது. அதிலும் ரேகாவின் மகள் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
தற்போது ரேகாவின் மகளின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் உங்களுக்கு இவ்வளவு அழகான மகளா என்று ஆச்சரியத்துடன் புகைப்படங்களுக்கு லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.