கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.மங்காத்தா, இறைவி, பேரன்பு, பலூன், சிந்துபாத் ஆகிய படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்.
பள்ளியில் படிக்கும் போதே: நடிகை அஞ்சலி குறித்து சினிமா விமர்சகர் பேட்டி அளித்துள்ளார். அதில், ஆந்திராவில் பிறந்து வளர்ந்த அஞ்சலி தனது சித்தியுடன் சென்னையில் உள்ள வடபழனி பள்ளியில் படிக்கிறார். அப்போது தான் கற்றது தமிழ் திரைப்படத்திற்காக இயக்குநர் ராம் புதுமுகத்தை தேடும்போது அவர் கண்ணில் பட்டவர் தான் அஞ்சலி. அவர் அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவர் 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்.
சிறப்பான படம்: முதல் படத்திலேயே டேக்கே இல்லாமல் வசனத்தை பேசி படப்பிடிப்பு தளத்திலேயே கைத்தட்டலை பெற்றார். முதல் படமே அஞ்சலிக்கு சிறந்த நடிகை என்று பெயர் எடுத்தார். கற்றது தமிழ் படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆனாலும், இன்னும் அந்த படம் பேசக்கூடிய திரைப்படமாக இருக்கிறது.
இயல்பான நடிப்பு: இந்த நேரத்தில் அங்காடி தெரு திரைப்படத்திற்காக வசந்த பாலன் நடிகையை தேடிக்கொண்டிருந்தார். அப்போது கற்றது தமிழ் படத்தை தொலைக்காட்சியில் பார்த்து அஞ்சலியை தேர்வு செய்தார். அங்காடித் தெரு படத்தில் நடிக்க நேரடியாகவே பல துணிக்கடைகளுக்கு சென்று சேல்ஸ் பெண்களிடம் பேசி படத்தில் மிகவும் இயல்பாக நடித்திருந்தார்.
பிரிந்தனர்: இப்படி அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த அஞ்சலி ஜெய்யுடன் இணைந்து எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தார். அந்த படத்தில் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி பக்காவாக இருந்தது. இதையடுத்து இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லப்பட்டது. இந்த வதந்திக்கு இருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் சமீபத்தில் இருவரும் பிரிந்துவிட்டனர்.
சித்திக் கொடுமை: இந்த நேரத்தில் தான் நடிகை அஞ்சலி சித்தியிடம் பல கொடுமையை அனுபவித்தார். அவரின் டார்ச்சர் தாங்க முடியாமல், ஒரு கட்டத்தில் சினிமாவே வேண்டாம் என்று சினிமாவை விட்டு விலகி ஆந்திராவிற்கே சென்றார். அப்போது தான் தெலுங்கு தயாரிப்பாளர் உதவியுடன் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டே இருக்கிறார் என்று செய்யாறு பாலு அஞ்சலி குறித்து பல உண்மைகளை அந்த பேட்டியில் கூறினார்.