மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘தனி ஒருவன்’.
சித்தார்த் அபிமன்யு என்ற வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும், மித்ரன் ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவியும் வாழ்ந்திருந்தார்கள் என்றே கூறலாம். இதுவரை ஜெயம்ரவியின் படங்களில் தனி ஒருவனுக்கென தனி இடம் என்றும் உண்டு.
ரசிகர்களின் ஆதரவைப் பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படம் வெளியானது முதலே இரண்டாவது பாகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது.
இந்நிலையில், இப்படம் வெளியாகி வரும் ஆகஸ்ட் 28-ம் தேதியுடன் 8 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. அன்று படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இப்படம் வெளியாகி வரும் ஆகஸ்ட் 28-ம் தேதியுடன் 8 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. அன்று படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.