முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா விவாகரத்திற்கு பின், பலவிதமான மன கஷ்டங்களை கடந்து வந்துள்ளார்.
மயோசிட்டிஸ் நோயால் நடக்கக் கூட முடியாமல் அவதிப்பட்டு வந்த சமந்தா அதில் இருந்து மீண்டுள்ளார்.
சாகுந்தலம் : சமந்தா நடிப்பில், அண்மையில் யாசோதா, சாகுந்தலம் திரைப்படம் வெளியானது. யசோதா படத்தில் வாடகைத் தாயாக நடித்திருந்தார் இந்த படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தது. யசோதா படத்தைத் தொடர்ந்து, காவியக் காதல் திரைப்படமான சாகுந்தலம் படத்தில் சாகுந்தலையாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்,மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 14ந் தேதி வெளியானது. ஆனால், இந்த படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
விஜய் தேவரகொண்டாவுடன் குஷி : தற்போது சமந்தா, தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. குஷி படப்பிடிப்பின் போது விஜய்தேவரகொண்டவும் சமந்தாவும் நெருங்கி பழகி வருவதாகவும் கிசு கிசுக்கப்பட்டு வந்தது.
வதந்திக்கு முற்றுப்புள்ளி : தற்போது சமந்தா குஷி படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் தேவரகொண்டாவுடன் துருக்கிக்கு சென்றுள்ளார். அங்கு ஓட்டலில், சரக்கு பாட்டில் டேபிளில் இருக்க, இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், நல்லது கெட்டது, ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்வி என அனைத்தையும் இந்த ஆண்டு பார்த்துவிட்டேன். ஆனால் சிலர் தான் உண்மையான நண்பர்களாக உடன் நிற்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்குத்தான் விவாகரத்தா : இந்த பதிவின் மூலம் கிசுகிசுக்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டாலும், குடியும், கும்மாளமுமாக துருக்கியில் வலம் வருகிறார்கள் என்றும், இதற்குத்தான் விவாகரத்து செய்தீங்களா என்றும் நெட்டிசன்ஸ்கள் அடுக்கடுக்கான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஒரு சில சமந்தாவின் நலம் விரும்பிகள் சமந்தா எது செய்தாலும் தப்பா என அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.