நடிகை ஆல்யா மானசா விஜய் டிவியின் ராஜா ராணி தொடர்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர். இந்த சீரியலில் இணைந்து நடித்த சஞ்சீவை இவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
ஆல்யா -சஞ்சீவ் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தை பிறப்பின்போது விஜய் டிவியின் சீரியலில் இருந்து விலகினார் ஆல்யா.
தொடர்ந்து தற்போது சன் டிவியின் இனியா தொடரில் இவர் நடித்து வருகிறார். டிஆர்பி ரேட்டிங்கில் இந்த தொடர் சிறப்பாக அமைந்துள்ளது.
மற்ற நடிகர்களுடன் ரொமான்ஸ் செய்தால் கணவர் ரியாக்ஷன் குறித்து பேசிய ஆல்யா மானசா: நடிகை ஆல்யா மானசா விஜய் டிவியின் ராஜா ராணி தொடர் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். இந்தத் தொடரில் இவரது நடிப்பு சிறப்பாக அமைந்தது. மேலும் இந்தத் தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவை காதலித்து திருமணமும் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முன்னதாக தன்னுடைய இரண்டாவது குழந்தை பிறப்பின்போது சீரியலில் இருந்து விலகினார் ஆல்யா.
தொடர்ந்து குழந்தை பிறந்தபிறகு மீண்டும் சீரியலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விஜய் டிவியில் இருந்து விலகி, சன் டிவியில் புதிய தொடரில் இணைந்தார். இனியா என்ற சன் டிவி தொடரில் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார் ஆல்யா. இந்தத் தொடரில் பெண் அடிமைத்தனத்தை வீட்டில் நடைமுறைப்படுத்தும் தன்னுடைய மாமனாரை திருத்தும் நோக்கத்தில் செயல்படும் இவரது அடுத்தடுத்த நடவடிக்கைகள் சிறப்பாக அமைந்துள்ளன.
அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்துவரும் இனியா தொடரில் ரொமான்சிற்கும் குறைவில்லாமல்தான் உள்ளது. இந்த சீரியலில் தன்னுடைய கணவர் விக்ரமாக நடித்துவரும் நடிகர் ரிஷியுடன் இணைந்து ஆல்யா மானசா மிகவும் நெருக்கமாகவும் நடித்து வருகிறார். இந்தக் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தொடரின் டிஆர்பியையும் ஏற்றி வருகிறது. இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் புரிதல் ரசிகர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
இந்நிலையில் தான் மற்ற நடிகர்களுடன் இணைந்து ரொமான்ஸ் செய்தால் தன்னுடைய கணவர் சஞ்சீவ் எப்படி ரியாக்ட் செய்வார் என்று தன்னுடைய பேட்டியொன்றில் ஆல்யா மானசா வெளிப்படுத்தியுள்ளார். இத்தகைய ரொமான்ஸ் காட்சிகளில் தான் நடித்தால், சிரியலில் என்ன இப்படி செய்துக் கொண்டிருக்கிறாய் என்று அவர் கேள்வி எழுப்புவார் என்றும், அப்படியே ஒரு லுக் விடுவார் என்றும் ஆலயா மானசா தெரிவித்துள்ளார்.
மேலும் மற்ற கணவர்கள் போலத்தான் சஞ்சீவும் தன்மீது மிகவும் பொசசிவ்வாக இருப்பார் என்றும் ஆல்யா மானசா கூறியுள்ளார். ஆனாலும் தன்னுடைய கணவர் மிகவும் நல்லவர் என்றும் தெரிவித்துள்ளார். ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஒரே துறையை சேர்ந்தவர்கள் என்பதால் ஒருவரின் சூழலை மற்றவர் புரிந்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றையும் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.