மூன்று தலைமுறை நாயகனின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை முடித்த தெம்பில் தனது பிறந்த நாளை மகிர்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்.
மணிரத்னம் : 1956ம் ஆண்டு பிறந்த மணிரத்னத்தின் இயற்பெயர் கோபால ரத்னம் சுப்பிரமணியம். சினிமாவிற்காக தனது பெயரை மணிரத்னம் என மாற்றிக் கொண்டார். சினிமா தயாரிப்பு, விநியோகம் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்த குடும்பத்தில் பிறந்த மணிரத்தினத்திற்கு சிறுவயது முதலே சினிமா மீது தீராத காதல் இருந்துள்ளது. இருப்பினும், அப்பாவின் ஆசைப்படி எம்பிஏ பட்டம் பெற்று ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
பல்லவி அனுபல்லவி : கே.பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன் ஆகியோரின் படங்கள் இவரின் சினிமா ஆசையை மேலும் தூண்டி விட்டன. இதனால் சினிமா மீது தனது கவனத்தை திரும்பி கதை எழுதி வைத்துக்கொண்டு காத்திருந்தார். இவரின் கதையை இயக்க யாரும் முன்வராததால், தானே தயாரிக்க முன்வந்தார். 1983ம் ஆண்டு 'பல்லவி அனுபல்லவி' என்ற கன்னட படத்தை இயக்கினார். பல்லவி அனுபல்லவி திரைப்படம் பெரும் வசூலை பெற்றுத்தரவில்லை என்றாலும், இப்படம் சினிமா வட்டாரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தனக்கென தனி பாணி : இதையடுத்து, மலையாளத்தில் உணரு, இதயம் ஒரு கோவில், பகல் நிலவு, மௌனராகம் போன்ற படங்களை இயக்கினார். இதில், மௌனராகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று மணிரத்னத்தை புகழில் உச்சியில் ஏற்றிவிட்டது. காதலானாலும் சரி, தீவிரவாதமானாலும் சரி தனக்கென ஒரு தனி பாணியை வைத்து இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். இவருடைய படங்களில் சிறப்பான திரைக்கதையும், நேர்த்தியான தொழில்நுட்பமும் , அளவெடுத்த வசனங்களுமே பெயர் பெற்றவை.
அக்னி நட்சத்திரம் : உலக நாயகன் நடிப்பில் உருவான நாயகன், அக்னி நட்சத்திரம், தளபதி, ரோஜா, பம்பாய், உயிரே, இருவர், ஆயுத எழுத்து, அலைபாயுதே என காலத்தால் மறக்கமுடியாத பல திரைப்படங்களை இயக்கி இந்திய சினிமாவின் பெரிதும் மதிக்கப்படும் படைப்பாளியாகத் திகழ்கிறார் மணிரத்னம். ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
பொன்னியின் செல்வன் நாயகன் : அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாக வைத்து பல முன்னணி நடிகர்களை வைத்து பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று சிறப்பு மிக்க திரைப்படத்தை இயக்கி சாதனை படைத்து மகிழ்ச்சியில் திளைத்து இருக்கிறார் மணிரத்னம். இன்று 67 வது பிறந்த நாள் காணும் மணிரத்னத்திற்கு அவரது ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலஃகள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்