பெட்ரூமில் அனிகா.. சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள் .

post-img

கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து அறிமுகமானவர் அனிகா. அதனையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார் அனிகா. அந்தப் படத்தில் அவரது நடிப்பு பலரால் ரசிக்கப்பட்டது. குறிப்பாக க்ளைமேக்ஸில் அவருக்கும், அஜித்துக்குமான காட்சி பலரையும் கலங்க வைத்தது.

 

ஹீரோயின் அனிகா: இந்தச் சூழலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா புட்டபொம்மா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனையடுத்து மலையாளத்திலும் ஹீரோயினாக களமிறங்கிய அவர் ஓ மை டார்லிங் என்ற படத்தில் நடித்தார். படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே அனிகா ஓவர் கவர்ச்சி காட்டியிருக்கிறார் என கூறப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகளா இது என வாயை பிளந்தனர்.

 

சுமாரான வரவேற்பு: கவர்ச்சி காட்டினாலும் படத்தின் கதையில் பல சிக்கல்கள் இருந்ததன் காரணமாக ஓ மை டார்லிங் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதனையடுத்து அவர் தற்போது மலையாளத்தி மாலு என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். மலையாளத்தில் முதல் படம் சொதப்பியதால் நிச்சயம் இந்தப் படத்தின் மூலம் தனக்கான இடத்தை நிலைப்படுத்திட வேண்டுமென்ற கணக்கில் இருக்கிறார் அவர்.

தமிழில் அனிகா: தெலுங்கு, மலையாளத்தில் ஹீரோயினாக வலம் வந்தாலும் தமிழிலும் எப்படியாவது ஹீரோயினாக வலம் வர வேண்டும் என்ற ஆசையிலும் அவர் இருக்கிறார். இந்தச் சூழலில் அவர் தமிழில் பிடி சார் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இவை தவிர சில படங்களில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது.

ஆக்டிவ் அனிகா: இதற்கிடையே சினிமாவில் நடிப்பதோடு மட்டுமின்றி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவிட்டும் ஆக்டிவ்வாக இருந்துவருகிறார் அவர். அனிகா பதிவிடும் புகைப்படங்களில் கவர்ச்சி கொஞ்சம் ஓவராகவே இருப்பது வழக்கம். அதனால் ரசிகர்கள் அதனை ட்ரெண்டாக்குவதும் நடந்துவருகிறது. அந்தவகையில் அனிகா சுரேந்த்ர தற்போது புதிய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

பெட்ரூம்: அனிகா சுரேந்தர் தனது பெட் ரூமில் இருந்தபடி சில புகைப்படங்களை தனது இன்ஸாகிராமில் பதிவிட்டிருக்கிறார். ஊதா நிற உடை அணிந்திருக்கும் அவர் பார்வையிலும், முக பாவனைகளிலும் பலரையும் கவர்ந்திருக்கிறார். அதுமட்டுமின்றி அந்தப் புகைப்படங்களில் கவர்ச்சியும் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது. இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வழக்கம்போல் அவற்றை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

Related Post