தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு என தனி மவுசு இருக்கிறது. அதிலும் ஏதாவது ஒரு பேய் படம் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்து விட்டது என்றால் உடனே அந்த படத்தின் அடுத்த அடுத்த பாகங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்கின்றன.
குறிப்பாக காஞ்சனா அரண்மனை உள்ளிட்ட திரைப்படங்கள் மூன்று நான்கு பாகங்களாக கூட வெளியாகிவிட்டது அந்த அத்தனை படங்களுமே பெருவாரியான ரசிகர்களை கவருகின்றன.
தனியாக வசூலிலும் சாதனை படைக்கின்றன அந்த வகையில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு என்ற திகில் திரைப்படம் காமெடி கலந்த திகில் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகமாக டிடி ரிட்டன்ஸ் என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது இந்த படத்தில் பாண்டிச்சேரி பகுதியில் சூதாட்டத்தில் தோற்றவர்களை கொலை செய்து விடுவதை வழக்கமாக வைத்திருக்கக்கூடிய ஒரு குடும்பம்.
ஒரு கட்டத்தில் அந்த குடும்பத்தை ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்துது கொன்று விடுகிறார்கள். அதன் பிறகு தற்போது பாண்டிச்சேரியில் வசித்துக் கொண்டிருக்கும் ஹீரோவான சந்தானம் அண்ட் கோ பலகட்ட பிரச்சனைகளை சந்தித்து ஒரு தேவைக்காக அந்த குடும்பம் வசித்த பேய் பங்களாவில் குடியிருக்கின்றனர்.
அதன்பிறகு அங்கு நடக்கும் அதிரி புதிரி காமெடி கலாட்டா தான் இந்த டிடி ரிட்டன்ஸ். சந்தானம் தன்னுடைய லிமிட் என்ன என்பதை நன்கு அறிந்து மீண்டும் கொடுத்திருக்கிறார்.
தனக்கே உரிய ஸ்டைலில் படத்தை தாங்கி கொண்டு செல்கிறார். அதிலும் இந்த கால வெப் சீரிஸ்.,. ஊம் சொல்றியா மாமா.,. என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை அனைத்தையும் அடித்து கலாய்த்து தள்ளுகிறார்.
இதற்கு பக்கபலமாக நடிகர்கள் மாறன், ரெடிண் கிங்ஸ்லி, முனீஸ் காந்த், மொட்டை ராஜேந்திரன் என பல காமெடி நட்சத்திரங்கள் இந்த படத்திற்கு வலு செர்துள்ளர்கள்.
ஒவ்வொரு காட்சியும் அதகலமாக இருக்கிறது. குழந்தைகளுடன் வயிறு குலுங்க சிரிக்க இந்த வார இறுதிகான சிறப்பான படமாக இந்த படம் இருக்கும். படத்தின் முதல் 40 நிமிடங்கள் கதை நகர்வது எதை நோக்கி படம் செல்கிறது என்று ஒரு குழப்பமான நிலையில் இருக்கிறது.
அதன் பிறகு தான் படம் பிக்கப் ஆகிறது குறிப்பாக அந்த பங்களாவுக்கு சென்ற பிறகு அவர்கள் அடிக்கும் லூட்டி வயிறு வலிக்க சிரிப்பு தான். முதல் பாதிக்குள் கதை செல்லும் வரை கொஞ்சம் சுமார் என்று கூறலாம். இரண்டாம் பாதி.. மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கிறது.