சமந்தா மீது 11 வருட காதல்..சீரியல் நடிகர் செய்த செயல்.. கையில் அந்த பரிசு..

post-img

அத்தோடு தன்னுடைய காதலை நிரூபிப்பதற்காக நடிகை சமந்தாவிற்கு தன்னால் முடிந்த ஒரு சின்ன கிப்ட் ஒன்றையும் வாங்கிக்கொண்டு சமந்தாவை நேரில் சந்தித்து இருக்கிறார்.

இந்த நிலையில் சமந்தாவை சந்தித்து தான் வாங்கிய பொருளை கொடுத்த நடிகருக்கு சமந்தா எதிர்பார்க்காத செயலை செய்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஹாலிவுட், பாலிவுட் என பல மொழிகளிலும் கலக்கி வரும் நடிகை சமந்தா தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் கதாநாயகியாக வலம் வருகிறார். சினிமாவில் இவருடைய நடிப்புக்கு ரசிகர்களாக பல கோடி பேர் இருக்கும் நிலையில் சீரியல் நடிகர் நடிகை சமந்தாவை 11 வருடமாக காதலித்து வருவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்து இருக்கிறார்.

பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த சமந்தா சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி பல இளைஞர்களின் மனதை கவர்ந்திருந்தார். இந்த சமயத்தில்தான் அவருடைய காதல் திருமண வாழ்க்கை சில மாதங்களுக்குள் முடிவுக்கு வந்திருக்கிறது. அந்த கஷ்டத்தில் இருந்து வெளியே வராத சமந்தாவிற்கு அடுத்ததாக உடல் நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டது.

ஆனாலும் தைரியமாக அந்த நோயோடு போராடி அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார். இந்த நோய் பாதிப்பு மட்டும் வராமல் இருந்திருந்தால் அதிகமான திரைப்படங்களில் கமிட் ஆகி சமந்தா நடித்துக் கொண்டிருப்பார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்து குஷி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்தில் பிரமோஷனில் கலந்து கொண்ட சமந்தா விஜய தேவரகொண்டாவுடன் டான்ஸ் ஆடி பட்டையை கிளப்பி இருந்தார்.

இந்த நிலை விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்த நடிகர் பிரதோஷ் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தான் சிறுவயதிலிருந்து சமந்தாவை காதலித்து வருவது என்னை சுற்றி இருக்கும் நண்பர்களுக்கு தெரியும். இன்று நான் சமந்தாவை சந்திக்க போகிறேன். அவருக்காக நான் வாங்கிய பிரேஸ்லெட் இப்போ என் கையில் இருக்கு ஆனா மாலை சமந்தா கையில் இருக்கும் என்று கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து சந்தோஷமாக ஏர்போர்ட் சென்ற பிரதோஷ் அதைத்தொடர்ந்து சமந்தாவை சந்தித்து அவரிடம் அந்த பிரேஸ்லெட் கொடுத்து இருக்கிறார். அது அழகாக இருக்கிறது என்று சமந்தா பாராட்டி அதை வாங்கி தன்னுடைய கையில் அணிந்து கொள்கிறார். அந்த நிமிடத்தை ரொம்பவும் சந்தோஷமாக கொண்டாடிய பிரதோஷை சமந்தா கட்டிப்பிடித்து தன்னுடைய அன்பை தெரிவிக்க, இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார்.

Related Post