பிக் பாஸ் பிரபலம் ரச்சிதாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது. மேலும் ரசிகர்கள் ரச்சிதாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Courtesy: instagram
சின்னத்திரையில் டாப் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் மிகவும் பிரபலமான ரச்சிதாவுக்கு சின்னத்திரை ரசிகர்கள் ஏராளம். சரவணன் மீனாட்சி சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற, இந்த சீரியலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வெற்றி பெற்றது. சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ரச்சிதாவுக்கு, தொடர்ந்து சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
Courtesy: instagram
தொடர்ந்து ஜீ தமிழ், சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் முன்னணி கதாபாத்திரத்தில் செம பிஸியாக நடித்து வந்தார். எவ்வளவு நாள் தான் சின்னத்திரையில் இருப்பது வெள்ளித்திரைக்கு போகவேண்டாம் என்று யோசித்தரோ என்னமோ..
Courtesy: instagram
சீரியலில் பிஸியாக இருந்த ரச்சிதா, விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக பங்குபெற்றார். ஏற்கனவே சின்னத்திரை ரசிகர்கள் ஏராளமானோர் இருக்க, பிக் பாஸ் மூலம் மேலும் அதிக இளைஞர்கள் பட்டாளம் அதிகரித்தது.
Courtesy: instagram
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ரச்சிதாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் எதை நினைத்து பிக் பாஸ் வீட்டுக்குள் ரச்சிதா நுழைந்த்ரோ அது நிறைவேறியது. வேற என்ன பட வாய்ப்பு தான்.. 'மெய்நிகரே' என்ற படத்தில் ஹீரோயினியாக கமிட் ஆகியுள்ளார்.
Courtesy: instagram
ரச்சிதாவின் சினிமா வாழ்கை சூப்பராக இருந்தாலும் திருமண வாழ்கையில் ஒரே பிரச்னை தான். கடந்த 2015 ஆம் ஆண்டு தினேஷ் அன்பவரி காதலித்து திருமணம் செய்துகொண்டார் ரச்சிதா. பின்னர் இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு தனி தனியாக வாழ்ந்து வந்தனர்.
Courtesy: instagram
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரச்சிதா தனது கணவருடன் சேர்ந்து சந்தோசமாக இருப்பர் என்று பலரும் எதிர்பார்த்தனர், இருப்பினும் இவர்களுக்கு இடையே விரிசல் தான் அதிகரித்து. தற்போது இவர்களின் திருமண வாழ்கை முடிவுக்கே வந்துவிட்டது என்றே சொல்லலாம்..
Courtesy: instagram
இதனால் தற்போது மிகுந்த வேதனையில் இருக்கும் ரச்சிதா நிம்மதியை தேடி அழைக்கிறார் போல் தெரிகிறது. சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் "என் சோகத்தை மறைக்க திரப்பிஸ்டை பார்க்க செல்கிறான் என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது தனது திரப்பிஸ்ட் இவர் தான் என்று தனது செல்ல பூனை குட்டியை கொஞ்சம் வீடியோவை பகிர்ந்துள்ளார். ரச்சிதாவின் இந்த லேட்டஸ்ட் இன்ஸ்டா பதிவுக்கு ரசிகர்கள் கவலை படாதீங்க என்று ஆறுதலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.