18 வயசுலையே இதெல்லாம் வேணாம்-ன்னு லவ்வர் கிட்ட சொல்லிட்டேன்..! – பிரியா பவானி ஷங்கர் ஓப்பன் டாக்..!

post-img

நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய காதல் மற்றும் காதல் குறித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.


இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறியிருப்பதாவது, நான் 18 வயதில் இருக்கும்போதே காதலிக்க ஆரம்பித்து விட்டேன்.


காதலிக்க ஆரம்பித்ததும் முதலில் என் காதலனிடம் நான் கூறிய விஷயம் என்னவென்றால் இந்த பொசு பொசு என இருக்கும் பொம்மைகள் வாங்குவது.. அந்த பொம்மைகளுக்கு சாப்பாடு ஊட்டி விடுவது.. அதனுடன் படுத்து தூங்குவது இது போன்ற வேலைகள் எனக்கு பிடிக்காது.


இதெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டேன். எனவே, இதில் உன்னுடைய பணத்தை செலவு செய்து வீணடித்து விடாதே.. இதெல்லாம் எனக்கு பிடிக்காது.


என்ன இப்படி இறங்கிட்டாங்க..?அதற்கு பதிலாக நாம் எங்காவது சென்று நன்றாக சாப்பிடலாம் என்று கூறியிருக்கிறேன். எனக்கு இந்த பொம்மைகளை வைத்து விளையாடுவது நாய் குட்டிகளை கொஞ்சுவது இந்த விஷயம் எல்லாம் பிடிக்காது.. நன்றாக சாப்பிடுவேன்.


எனவேதான் பணத்தை அது போன்ற சின்ன விஷயங்களில் செலவு செய்யாமல் நன்றாக சாப்பிடலாம் என்று கூறினேன் என கூறியிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

 

 

Related Post