நம்ம கண்ணம்மாவா இது.. லேடி சூப்பர் ஸ்டாருடன் ரோஷினி ஹரிப்ரியன்.. வைரலாகும் புகைப்படம்..
1/7
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அறிமுகம் ஆனார் ரோஷினி ஹரிப்ரியன். இவர் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தார். ரோஷினி அந்த கத பாத்திரத்தில் வாழ்ந்திருப்பார். அவர் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
ரோஷினி ஹரிப்ரியன் மாடலிங் மூலம் தமிழ் சீரியலில் அறிமுகமானார். அவரது நிறமெய் அவருக்கு அடையாளமாக அமைந்தது. அவர் நடித்த பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் கதாபாத்திரம் கருப்பு நிறமாகும். ரோஷினியின் நடிப்பு கண்ணம்மாவை தத்ரூபகமாக மக்கள் மனதில் நிறுத்தியது.
பாரதி கண்ணம்மா சீரியல் டி என் ஏ வைத்தே பல காலம் விஜய் டிவியில் ஓடியது. கண்ணம்மா நடந்து , நடந்து சீரியல் தேயும் அளவுக்கு நடந்தார். அதைவைத்து மீம் கிரியேட்டர்கள் தங்கள் மீம்களை இணையத்தில் பறக்க விட்டனர். ஆனாலும் அந்த நேரத்தில் டீ ஆர் பி கிங்காக இருந்தது பாரதி கண்ணம்மா சீரியல்.
ஒரு கட்டத்தில் சீரியல் ஒரே ட்ராக்கில் செல்வதாக எண்ணி சீரியலில் இருந்து விலகினார். பின்னர் வினுஷா என்பவர் அந்த கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்தார். ஆரம்பதில் மக்கள் அவரை ஏற்று கொள்ளவில்லை என்றாலும் அவரது நடிப்பில் சீரியல் முன்னணியில் இருந்தது.
ரோஷ்ணி சீரியலிலிருந்து விலகிய பிறகு போட்டோஷூட்களில் கவனம் செலுத்தினர். அதன் பிறகு விஜய் டிவியில் புகழ்பெற்ற காமெடி கலந்த சமையல் நிகழிச்சியில் போட்டியாளராக வந்தார். அவரது கபடமில்லாத சிரிப்பில் ரசிகர்களை ஈர்த்தார்.
ரோஷ்ணி சமீபத்தில் ராசாத்தி என்ற ஆல்பம் பாடலில் நடித்திருந்தார். அது யூடியூபில் ரீலீஸ் ஆகி பல மில்லியன் வியூஸ்களை அள்ளியது. ரோஷ்ணி பல போட்டோஷூட்களை செய்து வருகிறார். மாடர்ன் டிரஸ் , ட்ரடிஷனல் டிரஸ் என மாறி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ரோஷ்ணி ஹரிப்ரியன் வெள்ளித்திரையில் பிரபலமான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ருந்தார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் பேன் கேர்ள் ஆக சந்தோசமாக உணர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.