தமிழ், மலையாளம் என மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்பவர் அபர்ணா பாலமுரளி. இவர் நடித்து சமீபத்தில் வெளியாகியுள்ள 2018 என்ற மலையாள படம் வெற்றியடைந்துள்ளது. இவர் சூரரை போற்று படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
அவர் மகேஷிண்டே பிரதிகாரம் (2016), சண்டே ஹாலிடே (2017) மற்றும் சூரரைப் போற்று (2020) ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்பட்டவர் . சூரரைப் போற்று திரைப்படத்தில் அவரது நடிப்பிற்காக, 2021 ஆம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.
அபர்ணா , இந்தியாவின் கேரளாவில் உள்ள திருச்சூரில் இசை அமைப்பாளரான கே.பி.பாலமுரளி மற்றும் ஷோபா பாலமுரளிக்கு மகளாக பிறந்தார் . கேரளாவில் உள்ள தேவமாதா CMI பப்ளிக் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.
ஜெயன் சிவபுரம் இயக்கிய லட்சுமி கோபாலசாமியுடன் இணைந்து யாத்ரா துடாருன்னு (2013) என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் அபர்ணா . 2015 இல், அவரது ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா திரைப்படம் வெளியானது.
அவர் 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த சர்வம் தாள மயம் (2019) திரைப்படத்தில் தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சூரரை போற்று படத்தில் பொம்மியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இவர் நடித்து வெளியான மலையாள படம் 2018. இந்த படத்தில் டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் டிவி ரிபோட்டராக அபர்ணா நடித்துள்ளார். படம் வெளியாகி 11 நாட்களில் 100 கோடி வசூல் செய்ததுடன் ₹200 கோடியும் வசூலித்தது.
2018 ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெரு மழை வெள்ளத்தை மையமாக கொண்டு எடுக்க பட்ட படம். கேரளாவில் ஓணம் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் ஓணம் கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன