இவர் ஆரம்பத்தில் பாக்யாவை அவமானப்படுத்திவிட்டு கோபிக்கு சப்போட்டாக ஒவ்வொரு முறையும் பேசிக் கொண்டிருப்பார். ஆனால் இப்போது பாக்யாவுக்கு ஆதரவாக இவர் மாறி இருப்பதால் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை ராஜலட்சுமியின் வீட்டில் அவருடைய மகனுக்கு திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது. அதற்கு பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதனால் தான் கடந்த வாரத்தில் கூட இந்த சீரியல் நகர்ப்புறங்களில் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்டு டிஆர்பி யில் முதல் இடத்தை பிடித்தது. இதுவரைக்கும் சன் டிவி அதிகம் ஆதிக்கம் செலுத்திய டிஆர்பி வரிசையில் முதல் முறையாக பாக்கியலட்சுமி சீரியலால் விஜய் டிவியும் முன்னணி இடத்தை பிடித்தது.
இந்த நிலையில் சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் பலரும் ரசிகர்களுக்கு பரீட்சையமாக மாறி இருக்கின்றனர். அந்த வகையில் ஆரம்பத்தில் பாக்யாவை அதிகமாக திட்டிக்கொண்டு அவமான படுத்திக் கொண்டிருக்கும் ஈஸ்வரி இப்போது கோபி மற்றும் ராதிகாவுக்கு எதிராக பேசிக் கொண்டு பாக்யாவுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் இப்போது நல்ல மாமியாராக மாறி இருக்கும் ஈஸ்வரிக்கு வரவேற்பு அதிகரிக்கிறது. தற்போது கூட தன்னுடைய மாமனார், மாமியார்களை தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பாக்கியா கோபியிடம் சவால் விட்டு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக சமையல் ஆர்டர் எடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் நடிக்கும் நடிகை ராஜலட்சுமியின் மகனுக்கு ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்று இருக்கிறது. அவருடைய திருமண பங்க்ஷன்க்கு நடிகை ராஜலட்சுமியோடு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டிருக்கின்றனர். தற்போது இந்த புகைப்படங்களை கம்பம் மீனா மற்றும் நேகா பகிர்ந்து இருக்கின்றனர்.
சின்னத்திரை பட்டாளங்களின் அணிவகுப்போடு நடைபெற்ற இந்த திருமணத்திற்கு அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். குறிப்பாக அனைத்து பாக்கியலட்சுமி நடிகர்களும் இந்த சீரியலில் திருமணத்திற்கு கலந்து கொண்டதற்காக நடிகர் ராஜலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறி இருக்கிறார். அதோடு தொடர்ச்சியாக தன் மகனுக்கு வாழ்த்து தெரிவித்து வருபவர்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.