விஜய் தொலைக்காட்சியில், காமெடியை அடிப்படையாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி' . கடந்த 3 சீசன்களும் மெகா ஹிட் கொடுத்த நிலையில் கடந்த ஜனவரி 28-ம் தேதி முதல் 4-வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் உள்ளனர். நிகழ்ச்சி தொகுப்பாளராக ரக்ஷன் தொடர்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குக் முதல் கோமாளிகள் வரை பெரும்பாலானோர் அடுத்தடுத்து வெள்ளித்திரை வாய்ப்பை கைப்பற்றி வருவதாலும், பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி வேண்டாம் என நினைப்பவர்கள் கூட, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
'குக் வித் கோமாளி சீசன் 4' நிகழ்ச்சியில் இந்த முறை 10 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக கடந்த 3 சீசனில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த முறை குக்காக மாறியுள்ளார். இவருடன் நடிகை சிருஷ்டி டாங்கே, பிக் பாஸ் பிரபலமான நடிகை ஷெரின், நடிகை விசித்ரா, அஜித் பட நடிகர் ராஜா ஐயப்பா, பாக்கியலட்சுமி சீரியல் தொடர் ஹீரோ விஜே விஷால், காளையன், மைம் கோபி, கிஷோர், ஆண்ட்ரியா என பத்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
கோமாளிகளாக முந்தைய சீசன்களில் இருந்த புகழ், குரேசி, சுனிதா, தங்கதுரை ஆகியோர் உடன் புதிய கோமாளிகளாக ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன், ரவீனா, மோனிஷா, சில்மிச சிவா, ஓட்டேரி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். பழம்பெரும் நடிகரும் நாகேஷின் பேரனும் நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ், கலை இயக்குநரும் நடிகருமான கிரண் ஆகியோர் வையில்கார்ட் எண்ட்ரி கொடுத்தனர்.
இதுவரை கிஷோர், ராஜா ஐயப்பா, விஜே விஷால், ஷெரின், காளையன், கஜேஷ், ஆண்ட்ரியன் உள்ளிட்ட போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். இந்த நிலையில் இந்த வார நிகழ்ச்சியிலிருந்து ஆண்ட்ரியன் வெளியேறியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட் விலகிவிட்டதாக தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு காரணம் வெங்கடேஷ் பட் சமீப நாட்களாக வெளிநாட்டில் இருந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இதனால், அவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டாரா அல்லது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டாரா என கமெண்ட் செய்கிறார்கள். ஒருசிலர் நிகழ்ச்சி விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது இப்போது எப்படி அவர் விலகுவார் என்றும் கூறுகின்றனர்.