விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆலியா மானசா. இவர் அந்த தொடரில் உடன் நடித்த சஞ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
Courtesy: Instagram
இந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' சீரியல் பட்டிதொட்டி எங்கும் பரவி டிஆர்பி-யில் முதல் இடத்தில் இருந்து வந்தது. இந்த ஜோடி பல இளைஞர்களின் ஃபேவரைட் காதலர்களாக இவர்கள் வலம் வந்தனர். பெண்ணுக்கு ஐலா என்றும் மகனுக்கு அர்ஷ் என பெயரிட்டுள்ளார்கள்.
Courtesy: Instagram
தொடர்ந்து விஜய் டிவியில் கலக்கிய ஆலியா, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'இனியா' சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் தனக்கென ஒரு தனி இடத்தை அமைத்துக்கொண்டு, பலருக்கும் பிடித்தமான சீரியல் நடிகையாக ஆலியா வலம் வருகிறார்.
Courtesy: Instagram
அவர் சமீபத்தில் நடந்த சன் குடும்ப விருதுகள் விழாவில் சிறந்த ஹீரோயின் விருதை வென்றுள்ளார். இவரது கணவர் சஞ்சீவ் அதே சன் டிவியில் கயல் தொடரில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் இன்றும் காதல் கொஞ்சும் ஜோடிகளாக வளர்ந்து வருகிறார்கள்,
Courtesy: Instagram
ஆலய மனசா குழந்தை பிறந்த பிறகு அதிக படியான எடையை அடைந்தார். அவருக்கு உடன் இருந்து அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்தார் சஞ்சீவ். இவர்கள் தங்களுக்கென்று யூடுயூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார்கள்
Courtesy: Instagram
இருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு வ்லோக் எடுத்து அதை ட்ரெண்டாகி வருகிறார்கள். ஆலியா தனது மகளுடன் நடனமாடும் விடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Courtesy: Instagram
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள் இவர்கள். அந்த விடியோவில் , அம்மாவுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அய்லாவும் சிறப்பாக ஆடுகிறார். குழந்தையின் சுட்டி தனம் யாருக்குத்தான் பிடிக்காது. இந்த வீடியோ இன்ஸ்டாவில் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது