அடிக்கடி இருவரும் வெளியே செல்வதை கண்கூடாக பார்க்க முடிவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ஹோட்டல் ஒன்றில் வெரைட்டி வெரைட்டியான தோசைகளை இருவரும் வெளுத்துக் கட்டும் காட்சியை பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறுதே என ரசிகர்கள் புலம்பித் தவிக்கின்றனர்.
பொங்கல் வைத்த தோழிகள்: தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் நண்பர்களாக பார்த்தாலும், ஹீரோயின்களை பெரிதாக அப்படி ஒன்றாக சேர்ந்து பார்ப்பதே அரிது தான். த்ரிஷா மற்றும் நயன்தாரா இப்பவும் ஒருத்தரை பற்றி ஒருத்தர் பேசுவதற்கே யோசிக்கும் அளவில் தான் உள்ளனர்.
இந்நிலையில், கோலிவுட்டில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் நெருங்கிய தோழிகளாக பழகி வருகின்றனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரியங்கா மோகனும் கீர்த்தி சுரேஷும் ஒன்றாக சேர்ந்து பொங்கல் வைத்த போட்டோக்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தின.
விஜய் அட்மின் உடன் ஜோடிப்போட்டு: நடிகர் விஜய்யின் அட்மின் ஜெகதீஷ் ப்ளிஸ் தொடங்கிய தயாரிப்பு நிறுவனமான தி ரூட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் நடிகை பிரியங்கா மோகன் உடன் நெருங்கிய நட்பை பாராட்டி வருகிறார். அந்த பொங்கல் விழாவில் இரு நடிகைகளும் லியோ படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் செம டிரெண்டானது.
தோசை சாப்பிடும் தேவதைகள்: ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் மற்றும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வரும் பிரியங்கா மோகன் இருவரும் ஹோட்டல் ஒன்றில் ஒன்றாக அமர்ந்து கொண்டு வித விதமான தோசைகளை வாங்கி சாப்பிடும் போட்டோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அனிகா ஜெயின் ஷேர் செய்த இந்த போட்டோவில் எந்த இடத்தில் எந்த கடையில் அவர்கள் அமர்ந்து தோசை சாப்பிட்டனர் என்கிற தகவலை வெளியிடவில்லை. ரசிகர்கள் தென்காசி, திருநெல்வேலி மற்றும் குற்றாலம் என ஆளுக்கொரு கெஸ்ஸிங் அடித்து விடுகின்றனர்.
என்ன மேட்டரா இருக்கும்?: இருவர் சாப்பிடுவதையும் முன் டேபிளில் அமர்ந்து கொண்டு போட்டோ எடுத்தது யார்? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. ஒருவேளை தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தில் கீர்த்தி சுரேஷும் முக்கிய ரோலில் சர்ப்ரைஸ் கேமியோவாக நடித்து வருகிறாரா? என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.
இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் வெளியான சாணிக் காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் ஹீரோயினாக நடித்திருந்தார். அடுத்து தனுஷை வைத்து அருண் மாதேஷ்வரன் இயக்கி வரும் கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்து வருகிறார். அந்த படத்தில் இருவரும் இணைந்து நடித்து வருகிறார்களா? அல்லது கீர்த்தி சுரேஷ் படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கிறாரா? இருவரும் இப்படி மாற்றான் லேடீஸ் வெர்ஷன் போல ஒட்டிக் கொண்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.