விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்து வருபவர் கேப்ரியல்லா. இந்த சீரியலுக்கு பிறகு இவரைக்குஎன்று தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது. இவர் வாந்தி எடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Courtesy: Instagram
கேப்ரியல்லா என்று அழைக்கப்படும் ஒரு இந்திய நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகையும் ஆவார். அவர் சிறு வயதில் திரைப்படத்தில் நடித்துள்ளார். அவர் ஜோடி ஜூனியர் என்ற ரியாலிட்டி டான்ஸ் தொலைக்காட்சி தொடரில் கலந்துந்து கொண்டார்.
Courtesy: Instagram
ஜோடி நம்பர் ஒன் ஆறாவது சீசனில் போட்டியாளராக வந்தார். அந்த சீசனில் வெற்றியும் பெற்றார். 2020 ஆம் ஆண்டில், பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி தொடரின் நான்காவது சீசனில் அவர் போட்டியாளராக கலந்து கொண்டார்.
Courtesy: Instagram
பிக்பாஸ் ஷோவில் இறுதி போட்டியாளராக இருந்த கேபி , பரிசு பெட்டியை எடுத்து கொண்டு வெளியேறினார். அவரது அந்த முடிவை பலரும் பாராட்டினார்கள். அவர் சிறு வயதில் ஸ்டார் விஜயின் ஒளிபரப்பான 7c தொடரில் நடித்தார்.
Courtesy: Instagram
சென்னையில் ஒரு நாள் படத்தில் ரியாவாக நடித்தார். சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த அப்பா படத்தில் ரஷிதாவாக நடித்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. மக்கள் மனதில் இந்த படத்திற்கு தனி அங்கீகாரமே கிடைத்தது.
Courtesy: Instagram
கேபி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் காவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். இவருடன் ஜோடியாக சித்தார்த் நடிக்கிறார். பார்த்திபன் , காவ்யா என்று இவர்களின் நடிப்பிற்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. சமீபத்தில் நடந்த விஜய் விருது விழாவில் சிறந்த ஜோடிக்கான விருதை வென்றார்கள்.
Courtesy: Instagram
இவர்கள் இருவருக்கும் காதல், ரொமான்ஸ், சண்டை என வரும் பீலிங்ஸ் களை மக்களுக்கு தத்ரூபமாக நடித்து கட்டி வருகிறார்கள். இப்போது இருவரும் பிரிந்து இருக்கும் நிலையில் காவ்யாவாக, கேபி வாந்தி எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த சீரியல் ரசிகர்கள் அவர் சீரியலில் கர்ப்பமாக இருப்பார் என்று கூறி வருகிறார்கள். கேபிரில்லாவின் ரசிகர்கள் செல்லத்தை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என புலம்பி வருகிறார்கள். ஆனால் அவரோ சாரியில் க்யூட்டாக புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.