நடிகவேள் எம்.ஆர். ராதாவின் மகளும் நடிகை ராதிகா சரத்குமாரின் தங்கையுமான நிரோஷா மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரம் படத்தில் அறிமுகமானார்.
அக்னி நட்சத்திரம் படத்தைத் தொடர்ந்து கமலுக்கு ஜோடியாக சூரசம்ஹாரம் படத்திலும் நடித்தவர் நிரோஷா. ஆனால், ரஜினிகாந்த் உடன் நடிக்கும் வாய்ப்பே அவருக்கு கிடைக்காமல் போனது.
ஹாட் ஹீரோயின்: ஒரு பூங்காவனம் பாடலில் நீச்சல் உடையில் நடனமாடி ஒட்டுமொத்த 80ஸ் கிட்ஸையே தூங்க விடாமல் செய்தவர் நிரோஷா. சூரசம்ஹாரம், செந்தூரப்பூவே, பறவைகள் பலவிதம், பாண்டி நாட்டு தங்கம், சொந்தக்காரன், கை வீசம்மா கை வீசு, இணைந்த கைகள் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
நடிகர் ராம்கியை திருமணம் செய்துக் கொண்ட நிரோஷா பிரியமான தோழி படத்தில் லிவிங்ஸ்டனுக்கு ஜோடியாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். வின்னர் உள்ளிட்ட படங்களிலும் சீனியர் நடிகையாக நடித்த நிரோஷா சமீப காலமாக சீரியல்களில் நடித்து வருகிறார்.
ரஜினிக்கு ஜோடி: கமல்ஹாசன் உடன் சூரசம்ஹாரம் படத்தில் நடித்த நடிகை நிரோஷா பீக்கில் இருந்தபோது ரஜினியுடன் நடிக்க வேண்டும் என ரொம்பவே ஆசைப்பட்டார். ஆனால், அவரது கனவு கடைசி வரை பலிக்காமலே போய் விட்டது.
இந்நிலையில், பல ஆண்டுகள் கழித்து ரஜினி படத்தில் நிரோஷா நடிக்கப் போகிறார் என்றும் அதுவும் அவருக்கு ஜோடி என்றும் ஹாட் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நயன்தாராவில் இருந்து நிரோஷாவா:
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த தர்பார் மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இந்நிலையில், நிரோஷா ரஜினிக்கு ஜோடியா என்றும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
லால் சலாம் படத்தில்:
மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தான் தற்போது நிரோஷாவுக்கு கிடைத்திருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த படத்தில் நடித்து வரும் ரஜினிக்கு சம்பளம் 25 கோடி ரூபாய் என்றும் ரஜினி ஜோடியாக நடித்துள்ள நிரோஷாவின் ரோல் ரொம்பவே சின்ன ரோல் என்றும் கூறுகின்றனர். இது எந்தளவுக்கு உண்மை என்பது விரைவில் தெரிந்துவிடும்.