பிரியா பவானி ஷங்கருக்கு ரூட் போட்ட இயக்குனர்..! – எங்க போய் முடிய போகுதோ..!

post-img
Pinterest
 
 
 
நடிகை பிரியா பவானி ஷங்கர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யாவுடன் இவர் நடித்திருந்த பொம்மை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அதனை தொடர்ந்து பேமிலி சென்டிமென்ட் திரைப்படமாக உருவான யானை திரைப்படத்தில் குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்திருந்தார் நடிகை பிரியா பவானி சங்கர்.
இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கியிருந்தார். நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பொழுதே தன்னுடைய அடுத்த படத்திற்கும் கதாநாயகி பிரியா பவானி சங்கர் தான் என்று ரூட் போட்டு இருக்கிறார் இயக்குனர் ஹரி.
 
 
ஆனால், தற்பொழுது சிக்கல் என்னவென்றால் தன்னுடைய அடுத்த படத்தின் ஹீரோவாக இயக்குனர் ஹரி தேர்வு செய்திருப்பது நடிகர் விஷால்.
 
நடிகர் விஷால் தான் ஹரியின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். நடிகர் விஷாலின் சமீபகால திரைப்படங்கள் எதுவுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதாக தெரியவில்லை.
மேலும், விஷால் மீதான குற்றச்சாட்டுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வருவது கிடையாது. சில சமயங்களில் படப்பிடிப்பை தவிர்த்து விடுகிறார்.
இதையும் படிங்க :"இரண்டு ஆண்நபர்கள் முன்னால் அப்படி நிற்கும் அமலா பால்..." - கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!தயாரிப்பாளர்களுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் என இவர் மீது குற்றச்சாட்டுகள் பறந்து கொண்டே இருக்கின்றது. இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்தில் நடிகர் விஷாலின் ஹீரோவாக புக் செய்து இருக்கிறார் இயக்குனர் ஹரி.
ஏற்கனவே, பூஜை என்ற திரைப்படத்தை நடிகர் விஷாலுடன் சேர்ந்து உருவாக்கி இருந்தார் இயக்குனர் ஹரி.
 
படப்பிடிப்பு தளத்தில் நடிகர்களின் பிரபலம் அவர்களுடைய ரசிகர் பட்டாளம் என எதையும் கருத்தில் கொள்ளாமல் ஒரு வேலையால் போல வேலை வாங்குவதில் இயக்குனர் பாலாவுக்கு அடுத்த கட்டத்தில் இருப்பது இயக்குனர் ஹரிதான்.
படப்பிடிப்பு தளத்தில் கடுமையாக கோபப்படக்கூடிய ஒரு ஆள். இந்த சூழலில் நடிகர் விஷாலினை வைத்து எப்படி சமாளிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.
இந்த படத்தின் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கும் சூழலில் நடிகை பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதெல்லாம் எங்கே போய் முடிய போகிறது என்று புலம்புகிறது கோலிவுட் வட்டாரம்.
 
 
 
 
 

 

Related Post