"வாய்ப்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி".. மனம் திறந்த பாக்கியலட்சுமி ராதிகா!

post-img

 

கடந்த 2015 ஆம் ஆண்டு மசாலா படம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இப்படத்தை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குநர் எழில் இயக்கத்தில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக ரேஷ்மா பசுபுலேட்டி "புஷ்பா" என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

PHOTOS :

தனது முதல் படத்தில் கிடைக்காத வரவேற்பு "புஷ்பா" என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரேஷ்மா மிகவும் பிரபலமாகிவிட்டார். ரேஷ்மா என்று பெயரை விட புஷ்பா என்ற பெயரே இவரின் அடையாளமாக மாறியது என்று சொல்லலாம். 

ந்தளவிற்கு புஷ்பா கதாபாத்திரம் பட்டித்தொட்டி எங்கும் பரவு ரேஷ்மாவை மிகவும் பிரபலமாகியது. தமிழ் இளைஞர்கள் கவனத்தை ஈர்த்த ரேஷ்மாவுக்கு தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தாலும் புஷ்பா கதாபாத்திரம் அளவிற்கு ஹிட் கொடுக்க தவறியது.

PHOTOS :

அதன்பின்னர் விஜய் டிவியின் மிகவும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டார். இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த ரேஷ்மா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் அதிகப்படியான ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். 

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரேஷ்மாவுக்கு  பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் சொல்லும் அளவிற்கு ஒன்றும் கிடைக்கவில்லை அதற்கு மாறாக சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

PHOTOS : வாய்ப்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி.. மனம் திறந்த பாக்கியலட்சுமி ராதிகா!

தாய்மார்கள் முதல் இளைஞர்கள் வரை பலரின் கவனத்தை ஈர்க்கும் சீரியலாக  இருந்து வரும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி-யில் ஓஹோ-வென அசத்தி வருகிறது. அதிலும் ரேஷ்மாவின் ராதிகா கதாபாத்திரம் தான் சீரியலின் ஹார்ட் பீஸ் என்றே சொல்லலாம்

புஷ்பா கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமான ரேஷ்மா தற்போது ராதிகா கதாபாத்திரத்தில் ஜொலித்து வருகிறார். விஜய் டிவி சீரியலை தொடர்ந்து ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சீதா ராமன் என்கிற சீரியலிலும் ரேஷ்மா அசத்தி வருகிறார்.

PHOTOS : வாய்ப்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி.. மனம் திறந்த பாக்கியலட்சுமி ராதிகா!

இப்படியாக சின்னத்திரையில் டாப் நடிகையாக வலம் வரும் ரேஷ்மா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 4-இல்" ஜுட்ஜாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் செம ஆக்ட்டிவாக இருந்து வரும் ரேஷ்மா சமீபத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்

அதில், "கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 4-இல் என்னை நடுவராக தேர்தடுத்த இந்நிகழ்ச்சியின் இயக்குனர் தாம்சனுக்கு மிகவும் நன்றி" என்று புகைப்படத்துடன் உருக்கமாக பதிவிட்டுள்ளார். தற்போது ரேஷ்மாவின் இந்த சமீபத்திய புகைப்படம் இணையத்தில் ரசிகர்களால் நோட் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

Related Post