அதைத் தொடர்ந்து வீடியோ எடுக்க வேண்டாம் என்று முல்லை ஐஸ்வர்யாவிடம் கூறினாலும் அதை ஐஸ்வர்யா கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் வட்டிக்கு வாங்கி கொடுத்த பணம் வேண்டும் என்று ஐஸ்வர்யாவின் சித்தி மீண்டும் வீட்டிற்கு வந்து மிரட்டுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜூன் 8ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் ஐஸ்வர்யா பாத்ரூம் அருகே நின்று வீடியோ எடுத்துக் கொண்டு இருப்பதால் மூர்த்தி தனத்திடம் வந்து சண்டை போடுகிறார். இந்த பொண்ணு பண்ணுற வேலையால என்னால் பாத்ரூம் கூட போக முடியவில்லை என்று கோபப்படுகிறார்.
அதோடு இந்த பொண்ணு வீட்ல இருக்கிற எல்லாத்தையும் வீடியோ எடுத்து காட்டிகிட்டு இருக்கு. வீட்டு வாசலில் இருக்கிற குப்பைமேனி செடியை கூட விட்டு வைக்கிறது இல்ல. இப்படியே போயிட்டு இருந்தா எவனாவது திருடன் வந்து வீட்டில் இருக்கிற எல்லா பொருளையும் அள்ளிட்டு போகப்போறான் பாரு என்று கோபமா திட்டி எனக்கு சுத்தமா இவங்க வீடியோ போட்டது பிடிக்கல.
இப்ப நான் பேப்பர் கையுமா பாத்ரூம் போவதையும் வீடியோ எடுத்து வச்சிருக்கு. இதனால எனக்கு தான் அவமானமா இருக்கு என்று கோபப்பட்டு திட்ட, தனம் சமாதானம் செய்கிறார். இதை பார்த்து முல்லை ஐஸ்வர்யாவை ஏன் ஐஸூ இப்படி பண்ணிட்டு இருக்க, மாமாவுக்கு வீடியோ எடுக்கிறதே பிடிக்கல, நீ மாமாவையே வீடியோவில் காட்டிகிட்டு இருக்கியா என்று கேள்வி கேட்கிறார்.
அதுக்கு ஐஸ்வர்யா சீக்கிரமா எங்க சேனல் டெவலப் ஆயிடும். அதுல இருந்து எங்களுக்கு பணம் வர ஆரம்பிச்சுடும் என்று சம்பந்தம் இல்லாமல் பேசிக் கொண்டிருக்க உன் கிட்ட பேசி பிரயோஜனம் இல்லை என்று முல்லை கோபப்பட்டு போய் விடுகிறார். அதே நேரத்தில் மீனா வீட்டில் கயல் பாப்பாவிடம் ரைம்ஸ் சொல்ல சொல்லி கேட்க அந்த பாப்பா எதுவும் பேசாததால் மீனா கோபமாகிறார்.
அந்த நேரம் வெளியே சென்றிருந்த ஜீவாவும் ஜனார்த்தனனும் வீட்டிற்கு வர குழந்தை இடம் இப்படி கோபமா பேசாத என்று மீனாவை திட்டிக்கொண்டு ஜனார்த்தனன் கயல் பாப்பாவை தூக்கி வைத்து கொஞ்சி கொண்டு இனி கயல் பாப்பாவை வேற ஸ்கூலில் சேர்க்கனும். அதுவும் திருச்சியில் என்பதால் நீங்க ரெண்டு பேரும் கயல் பாப்பாவோடு அங்க போய் இருக்கிற மாதிரி இருக்கும் என்று சொல்ல, அது எல்லாம் சரிப்பட்டு வராது என்று ஜீவா எதிர்த்து பேசிக் கொண்டிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து கதிர் வீட்டுக்கு ஐஸ்வர்யாவின் சித்தி வர அந்த நேரம் தனமும் மூர்த்தியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஐஸ்வர்யாவின் சித்தி கண்ணன் ஐஸ்வர்யாவை எங்கே என்று கேட்டபடி பேசிக் கொண்டிருக்கும்போது, அப்போது இவருடைய குரலைக் கேட்டு கண்ணனும் ஐஸ்வர்யாவும் ஓடி வருகின்றனர். பணம் வாங்கிய விஷயத்தையும் மூர்த்தியிடம் சொல்ல வேண்டாம் என்று கெஞ்சுகிறார்.
பிறகு கண்ணனும் ஐஸ்வர்யாவும் சித்தியை தனியாக அழைத்துக் கொண்டு போய் கெஞ்சி கொண்டிருக்கின்றனர். பணத்தை பத்தி வீட்ல யார்கிட்டயும் சொல்ல வேண்டாம். நாங்க வேற யார்கிட்டயாவது பணம் அரேஞ்ச் பண்ணி தருகிறோம் என்று கண்ணன் சொல்ல, ஐஸ்வர்யாவின் சித்தி திட்டி கொண்டிருக்கிறார். அப்போது முல்லை அங்கு வருகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.