சென்னை அக்கரை சந்திப்பில் நடிகர் விஜய் சென்ற கார், சிவப்பு சிக்னலை மதிக்காமல் சென்றுள்ளது. இதுதொடர்பான காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின.
சென்னை பனையூரில் நேற்று நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்திற்கு விஜய் வந்தபோது, போக்குவரத்து சிக்னலை மீறியுள்ளார்.
விஜயின் இதே வாகனத்தில் விதிகளை மீறி கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததாக புகார் எழுந்த நிலையில் கடந்த ஆண்டு, காவல்துறையினர் 500 ரூபாய் அபராதம் விதித்திருந்தனர்.
இந்த நிலையில், விஜய், தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்றும் ஆலோசனை மேற்கொள்கிறார்.