ரசிகர்களால் கவரப்பட்ட ஒரு சீரியல் நடிகை என்றால் அது நடிகை மைனா நந்தினி என கூறலாம். சீரியல் மட்டும் இல்லாமல் திரைப்படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் திரைத்துறை வாழ்க்கையில் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் பயணித்து வருகிறார்.
ஆனால் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்தால் நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன. முதலில் உடற்பயிற்சி கூடம் நடத்திக் கொண்டிருந்த மணிகண்டன் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார் மைனா நந்தினி.
ஆனால் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக மணிகண்டன், அதாவது நடிகை மைனாவின் முதல் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து நடிகை மைனா நந்தினி மீது அவருடைய முதல் மாமியார் பல்வேறு புகார்களை கூறியிருந்தார்.
அடிக்கடி படப்பிடிப்புக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்று விடுவதும், வீட்டிற்கு தாமதமாக வருவதும் என்னுடைய மகன் எங்கே இருக்கிறாய் என்று போன் செய்து கேட்டால் என்னை சந்தேகப்படுகிறாயா..? ஆமாம் நான் லாட்ஜில் நான்கு பசங்களோடு தான் இருக்கிறேன் இப்போ உன்னால் என்ன செய்ய முடியும் என்றெல்லாம் பேசி என்னுடைய மகளின் மனதை நோகடித்து இருக்கிறார் மைனா நந்தினி.
திருமணத்திற்கு முன்பே என் மகனுடன் இருந்து கர்ப்பமாகி இரண்டு முறை கருக்கலைப்பு செய்திருக்கிறார் என்றெல்லாம் பகீர் தகவல்களை வெளியிட்டார். ஆனால், அவற்றையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாமல் சக சீரியல் நடிகர் யோகேஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்பொழுது ஒரு குழந்தைக்கு தாயும் ஆகி இருக்கிறார் மைனா நந்தினி.
போட்டு உடைத்த சீரியல் நடிகை மீனா வேமுரி..!
இந்நிலையில், தன்னுடைய முறைப்பையன் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட வீடியோவை இணையத்தில் பதிவேற்றிருக்கிறார். அதில் நான் சின்ன வயதாக இருந்த பொழுது கருத்த மச்சான தான் கல்யாணம் பண்ணிக்க போறேன் என்று கனவோடு வாழ்ந்தேன்.
ஆனால் எங்கள் குடும்பத்தில் எங்க ரெண்டு பேரையும் அண்ணன் தங்கச்சி ஆக்கிவிட்டார்கள். அவனுக்கு எப்போ கல்யாணம் முடியுதோ அப்பதான் காது குத்துவேன் என்று வைராக்கியத்தோடு இருந்தான்.
நாளைக்கு பங்க்ஷன்ல அவனை என் அப்பா மடியில உட்கார வைத்து அவனுக்கு காது குத்தி செம காமெடியாக போகுது. என் அத்தை பையனோட ரிசப்ஷன் கல்யாணம் காதுகுத்து எல்லாம் ஒரே நேரத்தில் நடக்கப்போகுது என்று நந்தினி பங்க்ஷன் நடக்கும் மண்டபத்துக்கு சென்று அங்கு நடந்த ரகளையான விஷயங்களை படமாக்கி தன்னுடைய யூடியூப் சேனலில் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது