பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் தனக்கு நேர்ந்த கொடூரமான அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தேன் இன்னும் பத்து நிமிடத்தில் இறந்து விடுவேன். உங்கள் வீட்டுக்கு பாடி வந்துவிடும் என்று என் காது படவே என் குடும்பத்தினரிடம் அங்கு சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.
இதனால் நான் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்பமும் கண்ணீர் விட்டு கதறினோம் என கூறியுள்ளார் ரோபோ ஷங்கர்.
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவ்வப்போது காமெடி ஸ்டாண்ட் அப் காமெடிகளை செய்து கலக்கிய ரோபோ சங்கர் சினிமாவிலும் பிரபலமான நடிகராக உருவெடுத்தார்.
நடிகர் வடிவேலு முறையான பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தபோது பல்வேறு காமெடி நடிகர்கள் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்தனர்.
அந்த வகையில், நடிகர் ரோபோ சங்கரும் தன் பங்குக்கு சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார்.
போட்டு உடைத்த சீரியல் நடிகை மீனா வேமுரி..!சமீபத்தில் தனக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஆறு மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்தார் ரோபோ சங்கர். ரோபோ சங்கர் கொஞ்ச நாளில் இறந்து விடுவார் என்று அவரை பார்க்க வந்தவர்கள் பலரும் கூறியிருக்கின்றனர்.
மட்டுமில்லாமல் சமூக வலைதளங்களிலும் அவருடைய புகைப்படங்கள் அவர் இறந்து விடுவதாக வெளியான செய்திகள் ஆகியவை அவருடைய குடும்பத்தை நிலைகுலைய செய்திருக்கிறது.
இது குறித்த விஷயங்களை விரிவாக பேசி கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார். ரோபோ சங்கர் தற்பொழுது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் இவர் தனக்கு இருந்த மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் ஆகியவற்றை விட்டுவிட்டு ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளை கையாண்டு கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.