விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர். பிரபலமாவது மட்டுமல்லாமல் பலருக்கும் திரைப்படங்களில் ஹீரோ, ஹீரோயின் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தற்போது தமிழ் திரையுலகில் முக்கிய புள்ளிகளில் ஒருவராக இருந்து வருகின்றனர்.
Courtesy: instagram
2/7
அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் ராஜு ஜெயமோகன். கடந்த 2006 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க கனா காணும் காலங்கள் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.
Courtesy: instagram
3/7
இரண்டாவது சீசனிலும் ராஜு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து சின்னத்திரை ரசிகர்களை குஷிப்படுத்தினர். சீரியலில் கலக்கிய ராஜுவுக்கு திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து பின்னர் அந்த வாய்ப்பை இழந்துவிட்டார்.
Courtesy: instagram
4/7
மேலும் இதைத்தொடர்ந்து மற்றுமொரு பிரபலமான விஜய் டிவி சீரியலான சரவணன் மீனாட்சி சீசன் 2வில் நாயகனுக்கு நண்பனாக நடித்து பார்வையாளர்களை அசத்தியிருப்பார். அதன்பின்னர் நாம் இருவர் நமக்கு இருவர், ஆண்டாள் அழகர், பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Courtesy: instagram
5/7
தனது கலகலப்பான பேச்சினால் பார்வையாளர்களை ஈர்த்த ராஜு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டார். இப்போட்டியில் பார்வையாளர்களின் பேராதரவோடு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகவும் தேர்தெடுக்கப்பட்டார்.
Courtesy: instagram
6/7
பின்னர் பிக் பாஸ் கொண்டாட்டம், பிபி ஜோடிகள் மற்றும் ராஜு வீட்ல பார்ட்டி உள்ளிட்ட விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று விஜய் டிவி பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறார். சின்னத்திரையில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிடுவதை ராஜு மறப்பதில்லை.
Courtesy: instagram
7/7
அந்தவகையில் ராஜுவின் திருமண புகைப்படம் மற்றும் ராஜுவின் மனைவி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்துடன் வைரலாகி வருகிறது. நெட்டிசன்களோ "இவங்களா உங்க மனைவி முதல் முறையாக இப்போதான் பார்க்கிறோம்" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.