அமேசான் பிரைமில் வெளியான தொடர் ஸ்வீட் காரம் காஃபி. இந்த தொடரில் மூன்று பெண்கள் தனியாக பயணம் மேற்கொள்கிறார்கள். அவர்கள் அதில் எப்படி வெற்றி அடைந்தார்கள் என்பதே கதையின் மைய கருத்து. இதில் நிவி கதாபாத்திரத்தில் நடித்த சாந்தி பாலச்சந்திரன் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
வெவ்வேறு தலைமுறைகளை சார்ந்த மூன்று பெண்கள் ஒரு பயணத்தை தொடர்கிறார்கள். அவர்கள் அந்த பயணத்தில் சந்திக்கும் சவால்கள் அனைத்தையுமே அருமையாக இந்த தொடரில் காட்சிப்படுத்தியுள்ளார்கள் . ஆணாதிக்கம் மிகுந்த இந்த சமூகத்தில் அவர்களுக்கு எதிராக,தங்களுக்கான நேரத்தை எடுத்து கொள்வது என பல கருத்துக்கள் இந்த தொடரில் உள்ளன.
சாந்தி பாலச்சந்திரன் ஒரு இந்திய திரைப்பட மற்றும் நாடக நடிகை ஆவார். இவர் மலையாள சினிமாவில் முக்கியமாக பணிபுரிகிறார். டோவினோ தாமஸுக்கு ஜோடியாக 2017 ஆம் ஆண்டு வெளியான மலையாள நகைச்சுவை திரில்லர் திரைப்படமான தரங்கம் திரைப்படத்தில் கதாநாயகியாக அவர் அறிமுகமானார்.
2017 ஆம் ஆண்டு கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவில் சர்வதேச போட்டிப் பிரிவில் சேர்க்கப்பட்ட ராண்டு பெர் படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் பிரியும் தருவாயில் இருக்கும் இளம் பெண்ணாக நடித்தார். இந்த படம் 2021 இல் OTT தளங்கள் மூலம் வெளியிடப்பட்டது.
சித்தார்த் பரதன் இயக்கிய டிஜின் என்ற கற்பனை நாடகத்தில் சௌபின் ஷாஹிருக்கு ஜோடியாக சாந்தி நடித்தார். அவர் சித்தார்த் பரதனின் சதுரம் படத்தில் ஸ்வாசிகா, அலென்சியர் லே லோபஸ் மற்றும் ரோஷன் மேத்யூ ஆகியோருடன் இணைந்து நடித்தார்.
ஸ்வீட் காரம் காஃபி என்ற இந்த இணைய தொடரில் லட்சுமி, மது, சாந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் தமிழ் மொழியில் ,மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
'ஸ்வீட் காரம் காஃபி' தொடரில் பாட்டி, அம்மா , மகள் என மூவரும் இணைந்து ஆண்கள் இல்லாமல் தனியாக பயணம் செய்துள்ளனர். இதில் மகளாக நடித்த சாந்தி பாலச்சந்திரனின் ரியல் பாட்டி மற்றும் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது