எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சத்யா தேவராஜனிடம் நேரலையில் நடிகர் தனுஷ் காதலை வெளிப்படுத்திய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை சத்யா தேவராஜன் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். மாடலிங் துறையில் தனது கேரியரை தொடங்கிய சத்யா பின்னர் சன் மியூசிக் சேனலில் VJவாக சின்னத்திரையில் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
அப்படித்தான் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “அருவி” சீரியலில் மலர் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சத்யா ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார். தற்போது எதிர்நீச்சல் சீரியலில் அவரின் ஆதிரை கேரக்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் சத்யா தேவராஜனின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளப்பக்கத்தில் வைரலாகியுள்ளது. நடிகர் தனுஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு அனேகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ரசிகர்களுடன் உரையாடும் நிகழ்ச்சியில் படக்குழுவினர் பங்கேற்றிருந்தனர்.
அப்போது தனுஷிடம் ஒருவர், ’நீங்க படத்துல நிறைய ஹீரோயின்களுக்கு லவ் ப்ரபோஸ் பண்ணி பார்த்திருக்கேன்.
நிஜத்துல இப்ப இந்த நிகழ்ச்சியில இருக்க பொண்ணுங்க யாரிடமாவது உங்க ஸ்டைலில் ப்ரபோஸ் பண்ண முடியுமா..? எனக் கேட்டார் அவர் வேறு யாருமல்ல நடிகை சத்யா தேவராஜன் தான்.