பிரபல விஜய் பட நடிகையின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே.
தமிழில், ‘முகமூடி’ படம் மூலம் நடிகையானவர் பூஜா ஹெக்டே.
அதனை தொடர்ந்து இந்தி, தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருகிறார்.
தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.
பூஜா ஹெக்டே நடிப்பில் தற்போது இந்தியில் ‘கிசா கா பாய் கிசி கி ஜான்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் பூஜா.
இது தமிழில் அஜித் - சிவா கூட்டணியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன வீரம் திரைப்படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.
இப்படி சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே, போட்டோஷூட் நடத்துவதிலும் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அவ்வாறு எடுக்கும் புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது சினிமா பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில் தற்போது பிரபல நடிகை பூஜா ஹெக்டேவின் சிறுவயதில் எடுத்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.