பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி அஸ்ஸாமை சேர்ந்த ரூபாலி பருவாவை இன்று இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
ஆஷிஷ் வித்யார்த்தி 11 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஆசிஷ் வித்யார்த்தி ஒரு பான் இந்திய நடிகர் என்றாலும் இவர் அதிகமாக தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள இவர், பாபா, கில்லி, மாப்பிள்ளை, உத்தம புத்திரன் உட்பட பல தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஆவார்.
மேலும் இவரது சிறந்த நடிப்பிற்காக 1995-ஆம் ஆண்டு துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது வென்றுள்ளார்.
இவர் முதலாவதாக நடிகர், பாடகர் மற்றும் நாடக கலைஞரான ராஜோஷி பருவாவை திருமணம் செய்திருந்தார். இவர் பழைய நடிகையான சகுந்தலா பருவாவின் மகள் என்பது குறிப்பிடதக்கது.
நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தற்போது கவுகாத்தியைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பரை கடந்த மே மாதம் 25-ம் தேதி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் எளிய முறையில் உறவினர்கள் முன்னிலையில் பதிவுத் திருமணமாக நடந்தது. 60 வயதில் அவர் செய்து கொண்ட இரண்டாம் திருமணம் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது.
ஆனால் இத்தகைய விமர்சனங்களை தவிர்த்துவிட்ட இந்தத் தம்பதிகள் முன்பு சிங்கப்பூருக்குச் சுற்றுலா சென்றிருந்தனர்.
தற்போது இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவிற்கு இருவரும் சென்றுள்ள நிலையில் அந்த புகைப்படங்களை ரூபாலி பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.