இப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையில் சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஜெயிலர் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நெல்சனின் பீஸ்ட் திரைப்படம் மிக பெரிய தோல்வியை சந்தித்த நிலையில் முழு நம்பிக்கையுடன் ரஜினி ஜெயிலர் திரைப்படத்தை நெல்சனுக்கு கொடுத்துள்ளார். இப்படம் மிக பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த 10 தேதி உலகம் முழுவதும் வெளியானது.