குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் இம்யூனிட்டி பேண்ட் ஜெயித்த சிவாங்கி பற்றி சமூக வலைத்தளத்தில் பல வதந்திகள் பரவி வருகிறது.
அதில் நடுவர்கள் சிவாங்கிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் பலர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
அது குறித்து இணையதளத்தில் செஃப் வெங்கடேஷ் பட் கோபமாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனுக்கு கிடைத்த வெற்றி பெரிய அளவில் இருந்ததால் அதைத் தொடர்ந்து தற்போது நான்காவது சீசன் வரைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த நான்காவது சீசனில் ஆரம்பத்தில் இருந்தே அடிக்கடி சர்ச்சைகளிலும் வதந்திகளிலும் சிவாங்கி சிக்கிக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு மூன்று சீசன்களிலும் சிவாங்கி கோமாளியாக இருந்து நான்காவது சீசனில் அதிரடியாக குக்காக மாறி இருக்கிறார். இது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது என்றாலும் பலர் இதை பாராட்டியும் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே பிக் பாஸ் ஆறாவது சீசனில் கடைசி நேரத்தில் அசீம்க்கு அவார்டு கொடுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது அதே வரிசையில் சிவாங்கியும் இடம் பிடித்திருக்கிறார். விஜய் டிவி ப்ரோபர்ட்டியாக இருக்கும் சிவாங்கி தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்று ஆரம்பத்தில் இருந்தே நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
சிவாங்கிக்கு நான் வெஜ் செய்ய தெரியாது அதுவும் காய்கறிகள் கட் பண்ண தெரியாமல் அவரே பல நேரங்களில் தவித்து இருக்கிறார். ஆனால் இப்போ மட்டும் எப்படி சமையல் செய்து கொண்டிருக்கிறார். எல்லாம் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக நடக்கும் பிளான் என்று சிலர் இப்ப வரைக்கும் ஒவ்வொரு எபிசோட்டுக்கும் கருத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த வாரம் முதல் ஐந்து ஃபைனலிஸ்டுகளில் முதல் நபராக சிவாங்கியை தேர்ந்தெடுத்து இருப்பது பல்வேறு சர்ச்சைகளை மீண்டும் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் சிவாங்கிக்கு கோமாளியாக குரேஷி கலந்து கொண்டு சிவாங்கிக்கு சமையலில் சொதப்பாமல் ஹெல்ப் பண்ணியதால் இந்த வாரம் இம்யூனிட்டி பேண்ட் பெற்று இருக்கிறார். இது குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
இது பற்றி முதல்முறையாக செஃப் வெங்கடேஷ் பட் டென்ஷன் ஆகி கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் நானும் சிவாங்கியும் அப்பா பொண்ணு மாதிரி பழகினாலும் அது எல்லாம் கேமுக்கு வெளியே தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொருத்தவரை யாருக்கும் எவ்விதமான சலுகையும் காட்டுவதில்லை. அவங்க சமைக்கும் உணவு நல்லா இருந்தா மட்டுமே பைனலுக்கு போவாங்க. அவங்க மட்டும் தான் வெற்றியாளராக இருப்பார்கள் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.