உயிருக்கு ஆபத்தான நிலையில் சவுக்கு சங்கர்…! – வெளியான கடிதம்..! – பரபரப்பு தகவல்கள்..!

post-img

பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள ஒரு கடிதம் இணைய வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மட்டத்தில் நெருக்கமாக இருக்கக்கூடிய நபர்கள் செய்யக்கூடிய ஊழல்கள் சட்ட மீறல்கள் உள்ளிட்டவற்றை அடையாளம் கண்டு அதனை பொதுவெளியில் தெரியப்படுத்துவதும் தன்னுடைய முழு நேர வேலையாக செய்து கொண்டிருக்கிறார்.
வெறுமனே பொதுவெளியில் தெரியப்படுத்துவது மட்டுமில்லாமல் தன்னால் முயன்ற நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று எடுத்து வருகிறார்.


இணைய பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வரக்கூடிய ஒரு நபர் கடந்த இரண்டு ஆண்டு காலமாக இவர் மிகவும் ஆக்டிவாக இயங்கி வருவதை பார்க்க முடிகிறது. தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி இருக்கிறார்.
அன்றாடம் அரசியல் நகர்வுகளை அக்குஅக்காக பிரித்து அந்த நகர்வுகளுக்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியல் என்ன..? என்று பல்வேறு விஷயங்களை பேசி வரும் இவருக்கு தற்பொழுது மிகப் பெரிய ஆபத்து ஒன்று வந்திருக்கிறது என தெரிகிறது.
சமீபத்தில். மணல் கடத்தல் கும்பல் குறித்த சில ஆய்வுகளை மேற்கொண்டு ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். இதனால் பாதிக்கப்பட்ட சிலர் சவுக்கு சங்கரை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்காக பெரிய அளவில் பணம் கை மாறி இருக்கிறது என்றும் ஒரு கடிதம் மூலம் சவுக்கு சங்கருக்கு தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.
மொட்டை கடுதாசியாக இந்த கடிதம் சவுக்கு சங்கரின் கைகளுக்கு கிடைத்திருக்கிறது. அதில் அனுப்புனர், தங்களது நண்பர் மதுரையிலிருந்து என இருக்கிறது.
அந்த கடிதத்தில் கூறியுள்ள விஷயம் என்னவென்றால், நண்பரே, நான் மதுரையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருக்கிறேன். தங்களுடைய செய்திகளை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய ரசிகன். நீங்கள் நேர்மையான முறையில் எடுத்து வைக்கக்கூடிய செய்திகளில் ஈர்ப்புடையவன்.

இது தான் காரணம்..!ஒருமுறை மதுரை நீதிமன்றத்தில் உங்களை சந்தித்து இருக்கிறேன். எனக்கு கிடைத்த உறுதியான தகவலின் படி, புதுக்கோட்டையைச் சேர்ந்த மணல் மாஃபியாக்கள் தங்களை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர்.
அதற்குண்டான வேலைகளில் இறங்கி இருக்கின்றனர். தற்போது திருச்சியில் மணல் வசூல் செய்யும் கருணாகர பாண்டியன் மற்றும் சென்னை திமுக கவுன்சிலர் கேகே நகர் தனசேகர் மூலம் வேளச்சேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி திருவேங்கடத்திற்கு பணம் கைமாறி இருப்பதாக உறுதியான தகவல் தெரிய வந்திருக்கிறது.
நான் கொடுக்கும் தகவலின் உண்மை தன்மையை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள். கவனமாக இருங்கள் என்று ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார். இந்த கடிதம் யார் அனுப்பியது..? என்ன விவரம்..? என்று தெரியவில்லை.
கடந்த 13ம் தேதி இடவட்ட இந்த கடிதம் சவுக்கு சங்கரின் கைகளுக்கு கிடைத்திருக்கிறது. இதனை தன்னுடைய Twitter பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் சவுக்கு சங்கர். ஏற்கனவே இது போன்ற பல கொலை மிரட்டுகள் வந்திருக்கின்றன சவுக்கு சங்கருக்கு.
அப்போதெல்லாம் என்னுடைய உயிரை பிடித்து வைத்துக்கொண்டு நான் உண்மையை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் அப்படியான உயிர் எனக்கு தேவையில்லை.
எப்படியாக இருந்தாலும் நான் ஒரு நாள் சாகத்தான் போகிறேன் அதுவரை என்னால் முடிந்த விஷயங்களை இந்த சமூகத்திற்கு செய்து கொண்டே இருப்பேன் என சவுக்கு சங்கர் கூறியிருக்கிறார்.
அப்படி இருக்கையில் தற்போது இப்படியான ஒரு கடிதம் கைகள் சிக்கி இருப்பதும் அதை தன்னுடைய Twitter பக்கத்தில் அவர் பதிவு செய்திருப்பதும் இணைய வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

 

Related Post