தமிழுக்கு பாரபச்சம்? அதிகபாசமாக 6 தேசிய விருதுகளை அள்ளிய 'RRR' திரைப்படம்!

post-img

2021 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக ஆர் ஆர் ஆர் திரைப்படம் 6 தேசிய விருதுகளை வென்றுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய மொழி படங்களுக்கான தேசிய விருது இன்று மாலை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்று முன்னர் 69 ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்த முறை அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பெரும்பாலும் ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் அதிக பச்ச விருதுகளை தெலுங்கு, ஹிந்தி மொழி படங்கள் தட்டி சென்றுள்ளதால், கோலிவுட் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.

பலரும் சமூக வலைத்தளங்களில், தேசிய விருதில் தமிழ் படங்கள் நிராகரிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். காரணம் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த கர்ணன், சார்பட்டா பரம்பரை, ஜெய்பீம், மாநாடு, வினோதைய சித்தம் போன்ற தரமான படங்கள் வெளியான போதிலும் கூட, 3 விருதுகள் மட்டுமே கிடைத்துள்ளது .

குறிப்பாக தமிழில், அதிகபச்சமாக 'கடைசி விவசாயி' படத்திற்கு இரண்டு தேசிய விருது கிடைத்தது. ஆனால் தெலுங்கில், RRR திரைப்படம் அதிக பச்சமாக 6 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR படத்தில் இடம்பெற்ற ஸ்டண்ட் காட்சிகளை அமைத்த கிங் சாலமனுக்கு, சிறந்த ஸ்டண்டுக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.  அதை போல் சிறந்த நடனத்திற்கான தேசிய விருது, பிரேம் ரக்‌ஷித் என்பவர் பெற்றுள்ளார். சிறந்த ஸ்பெஷல் எபெக்ஸ்சுக்கான தேசிய விருது சீனிவாஸ் மோகன் என்பவருக்கும் கிடைத்துள்ளது. அதேபோல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை கீரவாணி பெற்றுள்ளார். சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாகவும் ஆர் ஆர் ஆர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இறுதியாக சிறந்த ஆண் பாடத்திற்கான தேசிய விருதை கால பைரவா என்பவர் பெற்றுள்ளார். 

Related Post