தமிழ் தொலைக்காட்சி சீரியல் கயல், உணர்வுப்பூர்வமான கதை களத்தால், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனால் டி.ஆர்.பி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த சீரியலில் சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக், மீனா குமாரி, அபினவ்யா, அவினாஷ் அசோக், முத்துராமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சிறந்த தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் சமீபத்திய TRP தரவரிசையில் 'எதிர்நீச்சல்' இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆதிமுத்து குணசேகரன் தனது தங்கை ஆதிரையை தான் நினைத்தபடி கரிகாலனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். ஆனால் இதில் ஆதிரைக்கும், வீட்டிலுள்ள மற்ற பெண்களுக்கும் துளியும் விருப்பமில்லை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு விறுவிறுப்பாக நகர்கிறது எதிர்நீச்சல்.
சமீபத்திய எபிசோடில் கேப்ரியல்லா செல்லஸின் நடிப்பு 'சுந்தரி' சீரியலுக்கு மீண்டும் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளது. டி.ஆர்.பி-யில் இந்த சீரியல் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் கேப்ரியல்லா செல்லஸ், ஜிஷ்ணு மேனன், ஸ்ரீகோபிகா நீலநாத், ஜெய் ஸ்ரீனிவாஸ், மனோகர் கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கடந்த வாரத்தைப் போலவே, சமீபத்திய TRP தரவரிசையிலும் 'வானத்தைப் போல' நான்காவது இடத்தில் உள்ளது. புதிதாகத் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியான 'மிஸ்டர் மனைவி' சுவாரசியமான தொடக்கத்தைப் பெற முடிந்தது. இந்தத் தொடரில் ஷபானா ஷாஜஹான் மற்றும் பவன் ரவீந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், TRP தரவரிசையில் இது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இனியா சீரியல் டாப் 5-ல் இடம்பெறவில்லை.