செருப்பை திருடிவிட்டனர்.. வீடியோ வெளியிட்டு புகார் கூறிய சீரியல் நடிகை

post-img

சென்னை கேகே நகர் பிடி ராஜன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கீதா. நடிகர் விஜயின் மாஸ்டர், ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த ‘வீட்ல விசேஷம்’ உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே போல சின்னத்திரையில் ஆனந்தராகம் என்ற தொடர் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் வீட்டு வாசலில் இருந்த இவரது காலனி உள்ளிட்ட பொருட்கள் சில நாட்களாக தொடர்ந்து காணமல் போய் உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த இவர் நேற்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது உயர் ரக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்டு பின் காலால் அந்த செருப்பை லிப்டடில் தள்ளிவிட்டு திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக நடிகை சங்கீதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்புக்காக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நிலையில், ‘இருவர் ரொம்ப கூலாக வீட்டிற்கு வந்து செருப்பை திருடிட்டு போறாங்க, எதற்காக வந்தாகங்னு தெரியல.. அது கிடைக்காததால் செருப்பை திருடி சென்று இருப்பதாகவும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

மேலும், வயதான தாய் மற்றும் குழந்தைகளோடு தனியாக இருப்பதால் கேகே நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவுள்ளதாகவும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

Related Post