நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கிறார். லைக்கா இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இந்தப் படம் துவங்க தாமதமான நிலையில் நடிகர் அஜித் தனது உலக மோட்டார் பைக் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் நேபாளம் சென்றிருந்த அவர் அங்கு அந்நாட்டு ரசிகர்களுடன் உரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விடாமுயற்சி படத்துக்காக தனது பயணத்தை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, அஜித் பயணம் செய்த மேப்பை வெளியிட்டிருக்கிறார். அதன் படி இந்தியாவில் தெலங்கானா, மகாராஷ்டிரா, கொல்கத்தா, ராஜஸ்தான் டெல்லி, சண்டிகர், கார்கில் என பயணித்து பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு சென்றிருக்கிறார். பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சுரேஷ் சந்திரா பகிர்ந்திருக்கிறார்.