ஹிந்தியில் தொடங்கி தமிழ் வரை வெற்றி நடை போடும் ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். சிறியவர்கள், இளைஞர்கள் பெரியவர்கள் என ஒருத்தர் விடாமல் பார்க்க வைத்த நிகழ்ச்சி இதுவாகும். தமிழ் இந்த சீசன் தொடங்க வேலைகள் நடந்து வருகிறது.
Courtesy: Instagram
பிக்பாஸ் நிகழிச்சி என்பது 60 கேமெராக்கள் சுற்றி இருக்க அந்த வீட்டில் 15 முதல் 17 வரை போட்டியாளர்கள் பங்கேற்க அவர்களின் அன்றாட வாழ்க்கையை மக்களுக்கு காண்பிப்பதே ஆகும். இதில் போட்டிகள் வைக்கப்படும். அவர்கள் உணவுகளை அவர்களே சமைத்து சாப்பிட வேண்டும் முக்கியமாக வெளியில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள முடியாது.
Courtesy: Instagram
இந்த போட்டியில் பங்கேற்கும் பிரபலங்கள் மீது ரசிகர்களுக்கு தனி பாசமே உண்டாகும் அளவுக்கு சில நேரங்களில் சண்டைகள் நடக்கும். நல்லவர்கள், அப்பாவி என மக்கள் சிலரை தங்களுக்கு அபிமானவர்களாக மாற்றி விடுகின்றனர்.
Courtesy: Instagram
பிரபலங்களின் பெயர் பட்டியலில் தங்களுக்கு பிடித்தவர்கள் வருகிறார்களா என தேடுவைத்து வழக்கமாகி விட்டது. பிரபல நடிகையான சன்னி லியோன் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக புரளிகள் கிளம்பி வந்தன. அவரது அழகிய குடும்பத்தை பிரிந்து இருக்க மாட்டார் எனவும் ஒரு பேச்சு பரவியது.
Courtesy: Instagram
ஹிந்தியில் லைவ் ஆகா முதல் சீசன் பிக்பாஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, OTT ல் இரண்டாவது சீசன் தயாராகி வருகிறது. முதல் சீசனை கரண் ஜோகர் தொகுத்து வழங்கினார். அதில் திவ்யா அகர்வால் டைட்டில் வின்னர் ஆனார்.
Courtesy: Instagram
இந்நிலையில் சீசன் 2 சல்மான் தொகுத்து வழங்குவார் என பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. இவர் ஏற்கனவே டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்களை டிஜிஓகுது வழங்கி வருகிறார். தமிழில் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
Courtesy: Instagram
பிக்பாஸ் OTT யில் நடிகை மியா காலிபியா, சன்னி லியோன் இவர்களை போட்டியாளர்களாக மக்கள் எதிர்கிரட் பார்த்து வந்த நிலையில் சன்னி தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் போட்டியாளராக வரப்போவதில்லை, ஆனால் வருகிறேன் என ட்விஸ்ட் வைத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் குழம்பி போய் உள்ளார்கள்.