விக்கிக்காக முதன் முறையா இதை பண்ணேன்.. வெளிப்படையாக கூறிய நடிகை நயன்தாரா..!

post-img


தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. இயக்குநர் ஹரி இயக்கிய ஐயா படத்தில், சரத்குமார் அப்பா, மகன் என டபுள் ரோலில் நடித்திருப்பார்.
இதில் அப்பாவுக்கு லட்சுமி மனைவியாகவும், மகன் சரத்குமாருக்கு நயன்தாரா காதலியாகவும் நடித்திருப்பார்.


முதல் படத்திலேயே தன் வசீகர அழகால் ரசிகர்களை தன்வசப்படுத்திய நயன்தாரா அடுத்தடுத்து ரஜினி, விஜய், அஜீத், சூர்யா, சியான் விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நாயகர்களுடன் நடித்து, முன்னணி நடிகையானார்.


வல்லவன் படத்தில் நடித்த போது நடிகர் சிலம்பரசனுக்கும், நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டது. அது ஒரு கட்டத்தில் பிரேக்கப் ஆனது.

 

அதன்பின் வில்லு போன்ற படங்களில் நடித்த போது பிரபுதேவாவுடன் நயன்தாராவுக்க கிரஷ் ஏற்பட்டது.
இவரும் ஒரு கட்டத்தில் நயன்தாராவுக்கு குட்பை சொல்லிவிட நயன்தாரா நிறைய ஏமாற்றத்தில் இருந்தார்.
நயன் – விக்கி..
அத்தகைய ஒரு சூழலில்தான், இயக்குநர் விக்னேஷ் சிவன், நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி ஜோடியாக நடித்தனர்.


இந்த படத்தின் படப்பிடிப்பின் போது விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டது. 7 ஆண்டுகளாக நயன் – விக்கி காதல் ஜோடியாக பல இடங்களில் கைகோர்த்தபடியே காணப்பட்டனர்.
கடந்தாண்டில் இருவரும் முறைப்படி திருமணம் செய்துக்கொண்டனர். வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கும் பெற்றோர் ஆயிருக்கின்றனர்.
முதன் முறையாக..
தனது அன்பு கணவர் மீது நிறைய காதலுடன் இருக்கிற நயன்தாரா, ஒரு நேர்காணலில் இந்த விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்.
விக்னேஷ் சிவனுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். அவருக்கு என்ன கேக் பிடிக்கும் என தெரிந்து கொண்டு, அதை எப்படி செய்ய வேண்டும் என கற்றுக்கொண்டு அதனை செய்து கொடுத்தேன்.
இன்னும் சொல்லப் போனால் முதன்முறையாக நானே என் கையால் கேக் செய்து விக்னேஷ் உனக்கு கொடுத்து இருக்கிறேன் என்று, தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார் நடிகை நயன்தாரா.
தனது அன்பு கணவர் விக்கிக்காக முதன்முறையாக என் கையால் கேக் செய்து, நானே கொடுத்தேன் என வெளிப்படையாக கூறி இருக்கிறார் நயன்தாரா.

 

 

Related Post