பரிசுப்பொருளாக வரும் ஒரு கார் சிலரின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் சிக்கல்களே ‘சொப்பன சுந்தரி.'
நகைக்கடையில் பணிபுரியும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அம்மா, உடல்நலம் சரியில்லாத தந்தை, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி அக்கா ஆகியோர் இருக்கின்றனர். அவர் பணிபுரியும் நகைக்கடைப் பரிசுத்திட்டத்தின் மூலம் புதுக் கார் கிடைக்கிறது. ஆனால் குடும்பத்தை விட்டு வெளியேறிய கருணாகரன் அந்தக் காரை அபகரிக்க நினைக்கிறார். யார் வசம் கார் வந்தது என்பதைக் கொஞ்சம் அலுப்பு, நிறைய சிரிப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.