அவர் எனக்கானவர்.. நடிகரை காதலிப்பதை உறுதிப்படுத்திய தமன்னா!

post-img

விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னா, 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ் படங்களை தவிர்த்து விட்டு மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது இவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்

ஜெயிலர் படத்தில் : நடிகை தமன்னா விஷாலுடன் இணைந்து ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் தலைகாட்டாமல் இருந்த தமன்னா தற்போது, ரஜினியின் ஜெயிலர் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். அதை தொடர்ந்து அரண்மனை 4 படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அது மட்டுமின்றி இன்னும் சில படங்களும் அவருடைய கைவசம் இருக்கிறது.

காதலை மறுத்தார் : இப்படி பிஸியாக இருக்கும் நேரத்திலும் பாலிவுட் நடிகர் ஒருவருடன் டேட்டிங் செல்வதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசு பரவியது. சோஷியல் மீடியாவில் பரவிய வதந்தியால் டென்ஷனான தமன்னா, நான் காதலிப்பதாக தகவல் பரப்புகிறார்கள். அதை படிக்கும்போது எனக்கு சிரிப்புதான் வருகிறது. ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என கூறியிருந்தார்.

ஆமாம் காதலிக்கிறேன் : இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள தமன்னா, விஜய் வர்மாவை காதலிப்பதை உறுதிப்படுத்தி உள்ளார். அதில், நான் அவருடன் சேர்ந்து நடித்தாலேயே அவர்மீது காதல் வரும் என்று நான் நினைக்கவில்லை. நான் எத்தனையோ நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஒருவர் மீது காதல் வரவேண்டும் என்றால், அவரிடம் தனிப்பட்ட முறையில் ஏதாவது ஒன்று பிடித்து இருக்க வேண்டும். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

Tamannah Bhatia Spotted Kissing Her Boyfriend - Telugu Rajyam

எனக்கானவர் : எனக்கு விஜய் வர்மா மீது லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படப்பிடிப்பில் தான் காதல் ஏற்பட்டது. நான் பல நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நபர் அவர் தான் என்று என் மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. அவர் எனக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்ததால், அவருக்காக நானும் சில கட்டுப்பாடுகளை விட்டு வெளியே வந்துவிட்டேன்.

என்னுடைய மகிழ்ச்சிக்கான இடம் : இந்தியாவில் ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதையும் யாரோ ஒருவருக்காக விட்டுக் கொடுத்து வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், சரியான நபரை தேர்ந்து எடுப்பது முக்கியமானது, அவருடனான புரிதல் முக்கியம். அந்த புரிதலை நான் விஜய் வர்மாவிடம் உணர்ந்தேன். தற்போது, நான் எனக்காக ஒரு உலகத்தை உருவாக்கியது போல் உணர்ந்தேன். அவர் என் மீது அக்கறை உள்ளவராக இருக்கிறார். ஆமாம், அவர் தான் என்னுடைய மகிழ்ச்சிக்கான இடம் என விஜய் வர்மா மீதான காதலை நடிகை தமன்னா வெளிப்படையாக கூறியுள்ளார்.

Related Post