மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பரில் வெளியாகியிருந்தது.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பால், இரண்டாம் பாகத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், தற்போது வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தில் விக்ரமின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் 2-வில் மிரட்டிய விக்ரம் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தொடங்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அந்த எதிர்பார்ப்பின் பாதியை கடந்தாண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் பூர்த்தி செய்தது. மேலும், ரசிகர்களிkarன் வரவேற்போடு 500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதனால் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மீதும் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இதனையடுத்து இன்று ரிலீஸான பொன்னியின் செல்வன் 2 ரசிகர்களுக்கு இன்னும் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது. முக்கியமாக சீயான் விக்ரமின் நடிப்பை ரசிகர்கள் பயங்கரமாக பாராட்டி வருகின்றனர். இரண்டாம் பாகம் முழுவதும் விக்ரம் - ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் நடிப்பில் சிலிர்க்க வைத்துள்ளதாம்.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அனைவருக்கும் காட்சிகள் சமமாக இருந்தன. முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் வந்தியத்தேவனாகிய கார்த்தியும், அருள்மொழிவர்மனாகிய ஜெயம் ரவியும் கடலுக்குள் மூழ்குவதாக முடிந்தது.
அப்போது அவர்களை காப்பாற்ற ஊமை ரணியான ஐஸ்வர்யா ராயும் கடலுக்குள் குதிக்கிறார். அதன் தொடர்ச்சியாக தான் தற்போது வெளியான இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில், வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன் இருவரும் இறந்துவிட்டதாக நினைத்து, அதற்கு காரணமான நந்தினி ஐஸ்வர்யா ராய்யை பழிவாங்க நினைக்கிறார் விக்ரம். அப்போது அவருக்கும் பார்த்திபேந்திர பல்லவன் கேரக்டரில் நடித்துள்ள விக்ரம் பிரபுவுக்கும் இடையேயான காட்சி சிறப்பாக வந்துள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். அதேபோல், ஐஸ்வர்யா ராய்யை பழி வாங்குவதற்காக கடம்பூர் கோட்டையில் விக்ரம் என்ட்ரியாகும் காட்சி சிலிர்க்க வைத்துள்ளதாம்.
அதேபோல், தம்பி ஜெயம் ரவி, தங்கை த்ரிஷா ஆகியோரை சந்திக்கும் எமோஷனலான காட்சியிலும் விக்ரம் செம்மையாக ஸ்கோர் செய்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இப்படி ஒவ்வொரு காட்சியிலும் விக்ரம் மிரட்டியிருப்பதாக கமெண்ட்ஸ்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
இறுதியாக ஐஸ்வர்யா ராய்யை நேருக்கு நேராக சந்திக்கும் காட்சியில் விக்ரமின் நடிப்பு வேற லெவல் என ரசிகர்கள் ஹைப் கொடுத்துள்ளனர். இந்தக் காட்சியில் திரையரங்கில் இருந்த மொத்த ரசிகர்களும் விக்ரம் நடிப்பை பார்த்து மிரண்டு விட்டதாக பாராட்டியுள்ளனர். அதேபோல், விக்ரமுக்கு இணையாக ஐஸ்வர்யா ராய்யும் செம்ம டஃப் கொடுத்து நடித்துள்ளார் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.