குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் பலர். அந்தவகையில் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன்.
2007 ஆம் ஆண்டு மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்த அனிகா, தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில், இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில், அஜித்தின் மகள் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இப்படத்தின் மூலம் அனிகாவை ரசிகர்கள் ஓரளவுக்கு நோட் செய்தனர், அதன்பின்னர் மீண்டும் அஜித்திற்கு மகளாக, இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான 'விஸ்வாசம்' படத்திலும் நடித்திருந்தார். ஏற்கனவே ரசிகர்கள் நோட் செய்யப்பட்ட அனிகா, இப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்துவிட்டார்.
இப்படியாக குழந்தை கதாபாத்திரமாக வலம் வந்த அனிகா, சட்டென்று ஹீரோயினாக மாறிவிட்டார். ஹீரோயினாக மாறிய பின் இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் ஷாக் கொடுத்தார்.
நடிகைகள் பொதுக்கவே சினிமாவில் அறிமுகமாகிய பின் பட வாய்ப்புகள்கிடைக்காவிட்டால் கவர்ச்சியில் தலையை காட்டுவார்கள், ஆனால் அனிகாவோ தனது முதல் இடத்தில் இருந்து கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தது ரசிகர்களை தூக்கிவாரிப்போட்டது.
கவர்ச்சியாக உடை அணிவது மட்டுமல்லாமல், லிப் லாக் சீனிலும் நடித்து செம ஷாக் கொடுத்தார். இந்த நிலையில் தற்போது சினிமாவில் ஹீரோயினாக அனிகா நடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தன் சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சிப் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அனிகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் செம வைரலாகி வருகிறது.