முடிவுக்கு வருகிறதா சம்யுக்தா - விஷ்ணுகாந்த் காதல் திருமணம்?

post-img

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாவம் கணேஷன்' சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா. தொடர்ந்து பல சீரியல்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சம்யுக்தா, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சிப்பிக்குள் முத்து' சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார். 

மேலும் அதே சீரியல் சம்யுக்தாவுக்கு ஜோடியாக விஷ்ணுகாந் ஜோடியாக நடித்திருந்தார். விஷ்ணுகாந்த் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரஜினி, கோகுலத்தில் சீதை உள்ளிட்ட சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் சம்யுக்தா, விஷ்ணுகாந்தும் 'சிப்பிக்குள் முத்து' சீரியலில் ரீல் ஜோடிகளாக நடித்திருக்கின்றனர். ஆனால் உண்மையில் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். மேலும் இந்த சீரியலில் இருவரும் இணைந்து நடிக்க, இவர்களின் காதல் செம ஸ்டராங்காக மாறியதாக கூறப்படுகிறது.

                                                                         PHOTOS : முடிவுக்கு வருகிறதா சம்யுக்தா - விஷ்ணுகாந்த் காதல் திருமணம்? சம்யுக்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் குழப்பம்!

காதல் என்னும் கடலில் இருவரும் பயணிக்க, சில மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்துகொண்டு ரியல் ஜோடிகளாக மாறிவிட்டனர். இவர்களின் திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

திருமண புகைப்படங்களை இருவரும் வளைத்துக் கட்டி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். ரசிகர்களின் லைக் மற்றும் கமெண்டுகளுடன் இணையத்தில் இவர்களின் திருமண புகைப்படம் செம வைரலாக வலம் வந்தது.

இந்த நிலையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, யார் கண்ணு பட்டுச்சோ புரியவில்லை.. இருவரும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட திருமண புகைப்படத்தை டெலிட் செய்துள்னனர். இதனை நோட் சீதா ரசிகர்கள் என்ன ஆச்சு, உங்களுக்குள் சண்டையா.. விவாகரத்து நடக்கபோகிறதா.. என்றெல்லாம் கமெண்ட் அடிக்க தொடங்கிவிட்டனர்.

ஏகப்பட்ட விமர்சனங்கள் இவர்களை சுற்றி வர, இவர்கள் இருவரும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. 

அந்த பதிவில், "Peace over drama & distance over disrespect" என்ற கப்ஷனுடன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே இருவரும் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்று சிலர் சொல்லிவரும் நிலையில் சம்யுக்தவின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தற்போது சம்யுக்தாவின் இந்த லேட்டஸ்ட் இன்ஸ்டகிராம் பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இணையத்தில் விரலாகி வருகிறது.

Related Post