அதில் காதலித்து திருமணம் செய்து கொண்ட மருமகள்களும் அவர்களுடைய மாமனார்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அதில் ஒரு மருமகள் தன்னுடைய மாமனாருக்கு தினமும் பாக்கெட் மணி கொடுத்து அனுப்புவது கேட்டு பலரும் வியந்து போய் இருக்கின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் காதலித்து திருமணம் செய்து கொண்ட மருமகள்களும் அவர்களை முதலில் வேண்டாம் என்று மறுத்து பிறகு சம்மதித்த மாமனார்களும் இதில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
சமுதாயத்தில் எத்தனையோ விதத்தில் பலரும் முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கும் நிலையிலும் இப்போதும் பல இடங்களில் வரதட்சனை கொடுமை, மாமனார் மாமியார் கொடுமை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பல இடங்களில் மருமகளுடன் மாமியார் மாமனார்களை பாடாய்படுத்தி எடுக்கின்றனர். ஆனால் அந்த மாதிரி சூழ்நிலை எல்லா இடங்களிலும் இல்லை. இன்னமும் மகிழ்ச்சியாக பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை நிரூபிப்பது போன்று தான் இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் காதலித்து திருமணம் செய்த மருமகள்களும் அவர்களுடைய மாமனார்களும் தங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் ஒரு மாமனார் தன்னுடைய மருமகள் பற்றி கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் எனக்கு இந்த காதல் திருமணத்தில் சம்மதம் இல்லை. அப்போ என்னுடைய மகன் நான் இந்த பொண்ணை கல்யாணம் செய்யலன்னா, நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் என்று சொன்னான். அப்போ சரிப்பா நீ கல்யாணமே பண்ணிக்காம சந்தோஷமா இரு என்று சொல்லிட்டேன் என்று சொல்ல அவருடைய மருமகள் அதிர்ச்சி ஆகிறார்.
இது எப்ப நடந்தது எனக்கே தெரியல என்று மருமகள் கேட்க, கோபிநாத் என்னது கல்யாணம் பண்ணாம சந்தோஷமா இரு என்று சொன்னீர்களா? என்று கேட்டு, உங்களுக்கு எப்போ தோணுச்சு இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை நம்ம வேண்டான்னு சொன்னோமே என்று கேட்க, அதற்கு அந்த நபர் என் மருமகள் கிட்ட நான் இன்னைக்கு வரைக்கும் காசு கேட்டதே கிடையாது.
நான் வெளியே போகும் போது வண்டிக்கு பெட்ரோல் போட காசு இருக்காப்பானு கேப்பாங்க நான் இருக்குன்னு சொல்லிடுவேன் ஆனா வெளியே போய் பார்த்தா என் பாக்கெட்ல 2000, 3000 பணம் இருக்கும் என்று சொல்லி இருக்கிறார். இது அரங்கத்தில் இருந்த அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைத்திருக்கிறது. இது குறித்து ரசிகர்கள் இந்த காலத்தில் இப்படி ஒரு மருமகளா? என்று வியந்து போய் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நீயா நானாவில் சுவாரஸ்யம்..இந்த காலத்தில் இப்படி ஒரு மருமகளா? என்று வியந்து போய் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.