சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின் Glimpse வீடியோவை அவரின் பிறந்த நாளை முன்னிட்டு 23ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடுகின்றனர்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த படம் ஒன்பதாம் நூற்றாண்டில் தொடங்கி 21ஆம் நூற்றாண்டு வரை தொடர்வது போல் கதை எழுதப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் Glimpse வீடியோவை படத்தின் நாயகன் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு 23ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று மதியம் 11 மணிக்கு வெளியிடுகின்றனர்.
இந்த திரைப்படத்தில் சூர்யா இரண்டு வேறு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர்.